Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 03 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) வவுனியா, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 250 இளைஞர்கள் மூன்று மாத பயிற்சித்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். இப்பயிற்சித்திட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியன யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமது பகுதிகளில் இந்த திட்டங்களை முன்னெடுக்க முன்வந்துள்ளன. இத்திட்டம் மேலும் 4 மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது.
இந்த இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், மாவட்ட அபிவிருத்தித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி (EU-SDDP) செயற்திட்டத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படுகிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்ளைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 60 மில்லியன் யூரோக்கள் இந்த திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டாண்மை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி லிபுசி சகுபோவா கருத்து தெரிவிக்கையில், 'கலந்துரையாடல்களை ஊக்குவித்தல், பாரம்பரிய கல்வி மற்றும் புத்தமைவான பயிற்சி ஆகியவற்றுக்கிடையிலான ஒன்றிணைவுகளை மேம்படுத்தல், தொழில் வழங்குநர்கள் மற்றும் அரச அதிகாரிகள் போன்றன நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. இதற்கமைய, இத்திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கி புதிய இளைஞர் தலைமைத்துவ தலைமுறையை உருவாக்குவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.
சமூக அபிவிருத்தி தொடர்பான தீர்மானமெடுத்தல் செயற்பாடுகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரின் குறைந்தளவு பங்குபற்றல் வீதம் என்பது அவர்களின் ஆளுமைகள் மற்றும் வாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த செயற்திட்டத்தின் மூலமாக உள்நாட்டு அபிவிருத்தியை உறுதி செய்யக்கூடிய மற்றும் போதியளவு வசதிகள் இல்லாத குழுக்களை இந்த தீர்மானமெடுத்தல் செயற்பாடுகளுக்கு உள்வாங்கக்கூடிய தலைவர்களை உருவாக்க முடியும். இந்த மூன்று மாத திட்டத்தின் பின்னர், தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் வியாபார ஆலோசனைகள் சேவை மற்றும் இதர தொழில்நுட்ப ஆலோசனை உதவிகளை உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சமூக அங்கத்தவர்களுக்கு வழங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். சமூக மட்டத்தில் நல்லாட்சியை உறுதி செய்வது பற்றிய அறிவை கொண்டவர்களாக அமைந்திருப்பதுடன், தமது மாவட்டங்களில் நிலையான பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். மேலும், தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமட்ட அமைப்புகள் உள்ளுர் அரச அதிகாரிகள் மற்றும் இதர அபிவிருத்தி பங்காளர்களுடனும் இணைந்து உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை தமது இளைஞர் தலைவர்களை கொண்டு செயற்படுத்தக்கூடிய நிலையில் இருப்பார்கள். இத்திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) உதவி நாட்டு பணிப்பாளர் ராஜேந்திரகுமார் கணேசராஜா கருத்து தெரிவிக்கையில், 'இந்த திட்டத்தை பூர்த்தி செய்யும் இளைஞர்கள், சிறப்பான முறையில் தொழில் வாய்ப்புகளுக்கு தம்மை சந்தைப்படுத்தி, தமது சமூகங்களில் வினைத்திறன் வாய்ந்த சூழல் செயற்பாட்டாளர்களாக இயங்குவார்கள்' என்றார்.
தெரிவு செய்யும் முறை என்பது அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்;ததாக அமைந்திருந்தது. 1100 விண்ணப்பதாரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 400 இளைஞர்கள் மட்டுமே பயிற்சிகளுக்கு உள்வாங்கப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட பங்குபற்றுநர்கள் ஓர் விரிவான அறிமுக நிகழ்வில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதன் போது திட்டத்தின் எதிர்பார்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், சக பங்குபற்றுநர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் குழு செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இந்த திட்டம் தொடர்பில், வவுனியாவைச் சேர்ந்த இளம் பங்குபற்றுநரான சோபனா ஆறுமுகம் கருத்து தெரிவிக்கையில், 'எனது சமூகத்தில் இளைஞர் தலைமைத்துவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதற்கட்ட நடவடிக்கைகளில் நானும் பங்கேற்றதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.
EU-SDDP செயற்திட்டத்தின் கீழ், சமூகமட்டத்தில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதனூடாக, உள்ளுராட்சி சமூக மட்ட செயற்பாடுகளை உறுதி செய்வதுடன் பிரதேச அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்புகளை பேணுவதன் மூலமாக அவர்களில் தங்கியிருக்கும் தன்மையையும் மேம்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை UNDP மேற்கொள்கிறது.
40 minute ago
52 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
52 minute ago
8 hours ago