Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 03 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளுக்கு புகழ்பெற்ற உணவகமான The Palmyrah Restaurant அண்மையில் புதிதாக மீள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. கொழும்பு ரேணுகா சிட்டி ஹோட்டலில் அமைந்துள்ள The Palmyrah என்பது யாழ்ப்பாண உணவு வகைகள் உள்ளடங்கலாக இலங்கையின் வௌ;வேறு உணவு வகைகளுக்கு புகழ்பெற்ற உணவகமாக திகழ்கிறது. தனது மீள் அறிமுகத்தின் ஓரங்கமாக, 2500 ரூபாய்க்கு மேற்பட்ட சகல மதிய வேளை உணவு கொள்வனவுகள் மீதும் 25 சதவீத தள்ளுபடியை வழங்குவதை அறிமுகம் செய்துள்ளது.
ரேணுகா ஹோட்டல்ஸ் பிஎல்சியின் முன்னாள் தலைவரான அல்பிரட் லியோ தம்பிஐயா அவர்களின் சிந்தனை வெளிப்பாடாக அமைந்துள்ள The Palmyrah Restaurant, 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. விசேடமாக நாட்டின் வடக்கு பிரதேசத்தின் உணவு வகைகளையும், ஏனைய பகுதிகளைச் சேர்ந்த உணவு வகைகளையும் வழங்கும் வகையில் இந்த உணவகம் திகழ்ந்தது. யாழ்ப்பாண உணவு வகைகளில் தம்பிஐயா அவர்களின் விசேடத்துவம் வாய்ந்த ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளின் விசேட உணவுகளும் உள்ளடங்கியிருந்தன.
இந்த உணவகம் தாபிக்கப்பட்டது முதல், சுற்றுலாப் பயணிகளுக்கு விசேடமான உள்நாட்டு உணவு வகைகளுக்காக பரிந்துரைக்கப்படும் உணவகம் எனும் பெருமையை பெற்றிருந்தது. இந்த உணவகத்தினால் வழங்கப்படும் அசல் இலங்கை உணவு அனுபவத்தின் மூலமாக பல தலைமுறையினரால் விரும்பப்படும் உணவகம் எனும் பெருமையை பெற்றுள்ளது.
இந்த மீள் அறிமுகம் செய்யப்பட்ட நவீன உணவகமானது, இலங்கையின் பாரம்பரிய கலாசாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கி வருவதுடன், புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள உள்ளக பகுதிகள் அமைதியூட்டும் வகையிலும், நடுநிலையானதாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக, Palmyrah விசேட அப்ப வகைகள், ஆட்டு பொரியல், பொரித்த மீன் புட்டு, யாழ்ப்பாண நண்டு கறி, ஒடியல் கூழ் மற்றும் பால் அப்பம் ஆகியவற்றை உண்பதற்கு சிறந்த உணவகமாக அமைந்துள்ளது. வட்டலப்பன் அல்லது கிறீம் கரமெல் போன்ற இனிப்பு உணவுகளை உண்பதற்கும் சிறந்த உணவகமாக அமைந்துள்ளது.
Palmyrah Restaurant ஐ Trip Advisor பரிந்துரை செய்துள்ளது. 2013 மற்றும் 2015 ஆகிய வருடங்களுக்கான சிறந்த செயற்பாடுகளுக்கு சான்றிதழ்களை பெற்றுள்ளது. பாரம்பரிய சோறு மற்றும் கறி உணவுகளை வழங்கும் பெருமளவான உணவகங்கள் Palmyrah க்கு ஒப்பானதாக அமைந்திருக்கவில்லை என்பதை பல உணவு பிரியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வாடிக்கையாளர்களின் தெரிவுக்கமைவாக, சிறந்த உணவு வேளையை உருவாக்கிக் கொள்ளும் வகையில் பரந்தளவிலான கறிகளை உணவகம் வழங்கி வருகிறது.
அல்பிரட் தம்பிஐயா அவர்களின் எதிர்பார்ப்பு என்பது ஆரம்பம் முதல் வெற்றிகரமானதாக அமைந்திருந்ததுடன், 42 ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. உணவகம் தனது வழங்களை மேம்படுத்தியிருந்ததுடன், வினைத்திறன் வாய்ந்த சேவை, சிறந்த பாரம்பரிய உணவுத்தெரிவுகள் போன்றவற்றை வழங்கிய வண்ணமுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு விருந்தினருக்கும் உண்மையான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
ஜுன் 30 ஆம் திகதி வரை The Palmyrah மதிய உணவு வேளை சலுகை வழங்கப்படுகிறது. உணவகம் நண்பகல் 12 மணி முதல் பி.ப. 2.30 மணி வரை மதிய உணவு வேளைக்காக திறந்திருக்கும். முற்கூட்டியே பதிவு செய்து கொள்வது பரிந்துரைக்கப்படுவதுடன், இதனை 009411 2 573598 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ள முடியும். பாரம்பரியமான, இலங்கைக்குரிய விசேட உணவு வகைகளை சுவைக்க விரும்புவோருக்கு, இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்திருக்கும்.
43 minute ago
55 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
55 minute ago
8 hours ago