2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச அலங்கார மீன்பிடி வர்த்தக கண்காட்சியில் இலங்கைக்கு 29 விருதுகள்

Princiya Dixci   / 2015 ஜூன் 03 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ப.பிறின்சியா டிக்சி, பாநூ கார்த்திகேசு 

சர்வதேச அலங்கார மீன்பிடி வர்த்தக கண்காட்சியான 'அக்கியூவாறம' (AQUARAMA)- 2015 இல், 29 விருதுகளை இலங்கை சுவீகரித்துள்ளது. 

கடந்த மே மாதம் 28ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற 14ஆவது சர்வதேச அலங்கார மீன்பிடி வர்த்தக கண்காட்சியில் 29 விருதுகளை வென்ற அலங்கார மீன்பிடி சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, மீன்பிடி கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (3) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், 'சர்வதேச ரீதியில் அலங்கார மீன்பிடி உற்பத்தியாளர்கள் சாதனை படைத்திருப்பது பெருமைக்குரிய விடயம். இலங்கை, ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்ற அதேநேரம் தற்போது பாரிய வளர்ச்சி கண்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதில் பொலன்னறுவை, அலங்கார மீன்பிடி உற்பத்தியாளர் ஒருவர் விருதினைப் பெற்று உரையாற்றுகையில் 'வறிய அலங்கார மீன்பிடி உற்பத்தியாளர்கள் பலர் எமது கிராமங்களில் உள்ளனர். அவர்களுக்கான வங்கிக்கடன் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து ஊக்குவித்தால் இதைவிட பல சாதனைகளை அலங்கார மீன்பிடி வர்த்தகத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மேற்கொள்வார்கள்' எனத் தெரிவித்தார்.  

வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் பந்துல எகோடகே, இலங்கை தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிமல் சந்திராரட்ண மற்றும் உற்பத்தியாளர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

2014ஆம் ஆண்டு அலங்கார மீன்பிடி ஏற்றுமதியில் இலங்கை 12.5 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாகக் கொண்டிருந்தது. இது 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X