Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 10 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனம் (JASTECA) வின் முன்னாள் தலைவரான மஹிந்த சரணபால அவர்களுக்கு ஜப்பானிய தூதுவர் நொபுஹிடோ ஹோபோ அவர்கள் கௌரவிப்பு சான்றிதழ் வழங்கியிருந்தார். இந்த நிகழ்வு தூதுவரின் உத்தியோகபூர்வ வசிப்பிடத்தில் பல விருந்தினர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.
தனது அறிமுக உரையின் போது, மஹிந்த சரணபால அவர்கள் கடந்த 27 வருடங்களாக (JASTECA) வின் அங்கத்தவராக ஆற்றியிருந்த பங்களிப்பு பற்றி விபரித்திருந்தார். மேலும், (JASTECA) வின் தலைராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பாக 5S மற்றும் Kaizen ஆகியவற்றை இலங்கையில் முன்னெடுப்பதற்கு அவர் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். ஜப்பானில் அவர் நான்கு புலமைப்பரிசில்களுக்காக பங்குபற்றியிருந்தார். 1989 ஆம் ஆண்டில் இலங்கையில் 5S கொள்கையை அறிமுகம் செய்த பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளார் என ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார்.
ஜப்பான் மற்றும் இலங்கை இடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புணர்வை மேம்படுத்துவதில் மஹிந்த சரணபால ஆற்றியிருந்த பங்களிப்பையும் அவர் பாராட்டியிருந்தார்.
இந்த வைபவத்தை தொடர்ந்து, விசேட வரவேற்பு வைபவமொன்றை ஜப்பானிய தூதுவர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நலன் விரும்பிகள், பதில் காப்பாளர்கள் மற்றும் JASTECA வின் நிறைவேற்று கழக அங்கத்தவர்கள், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் ஜப்பானிய தூதுவராலயத்தின் நிர்வாகிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
JASTECA வின் முன்னாள் தலைவராக மஹிந்த சரணபால திகழ்வதுடன், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
39 minute ago
51 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
8 hours ago