2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டு கொண்டாட்டங்களில் களைகட்டிய எலிபன்ட் ஹவுஸ் மென் பான வகைகள்

A.P.Mathan   / 2015 ஜூன் 10 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நீண்ட காலமாக அனுசரணை வழங்கி வரும் எலிபன்ட் ஹவுஸ் நிறுவனம், 2015 இலும் புதிய மட்டத்தில் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தது. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 35 தேசிய, பிராந்திய மற்றும் பின்தங்கிய நிகழ்வுகளுக்கு ஷா FM, சிரச FM, சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் ரிதம் FM ஆகியவற்றுடன் இணைந்து அனுசரணைகளை வழங்கியிருந்தது. 

சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி தாபனத்தின் பான வகைகளுக்கான தலைமை அதிகாரி தமிந்த கம்லத் கருத்து தெரிவிக்கையில், 'எலிபன்ட் ஹவுஸ் ரசிகர்கள் புத்தாண்டை பற்றி சிந்திக்கும் போது, எமது பெருமளவான பான வகைகளின் மூலமாக புத்துணர்ச்சிக்குட்படுகின்றனர். இதற்கமைய, நாடு முழுவதிலும் இடம்பெற்ற 35 கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு அனுசரணைகளை வழங்கியிருந்தமை என்பது, குதூகலம் நிறைந்த தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெருமளவான இலங்கையர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்மையான முறையில் கொண்டு வருவதற்கு கைகோர்ப்பதாக அமைந்திருந்தது' என்றார். 

ஏப்ரல் மாதம் மாத்தறை மற்றும் குருநாகலின் குளியாப்பிட்டிய பிரதேசங்களில் ஆரம்பித்திருந்த பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுக்களின் போதும், அவுருது குமாரி போன்ற கலாசார நிகழ்வுகளின் போதும் எலிபன்ட் ஹவுஸ் மேலும் குதூகலத்தை சேர்த்திருந்தது. இவர்களுக்கும், பாடல், வாத்தியமிசைத்தல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கியிருந்தது. பின்னர் இந்த பண்டிகை காலத்தின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் மாபெரும் இசைக்கச்சேரிகளும் பொலன்நறுவை மற்றும் குருநாகலின் பொல்பித்திகம ஆகிய பிரதேசங்களில்  இடம்பெற்றிருந்தன. ஆனாலும், நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட புத்தாண்டு கொண்ட்டாட்டங்களில் ஆரம்பமாக மாத்திரம் இது அமைந்திருந்தது. மேலும் 15 மினி கொண்டாட்ட நிகழ்வுகள் விளையாட்டுகள், இசை நிகழ்வுகள் மற்றும் அழகுராணி தெரிவு நிகழ்வுகள் போன்றன 2015 ஏப்ரல் 16 முதல் 30 வரையிலான காலப்பகுதியினுள் இடம்பெற்றிருந்தன.

வானவில் தெரிவுகளான, எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா, எலிபன்ட் ஹவுஸ் நெக்டோ, EGB மற்றும் எலிபன்ட் ஹவுஸ் ஒரேன்ஜ் க்ரஷ் ஆகியவற்றை கொண்ட எலிபன்ட் ஹவுஸ் அனுசரணையில் இடம்பெற்ற மினி புத்தாண்டு கொண்டாட்டங்கள் 15 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தன. எல்பிட்டிய நகரின் அடகொஹொட பகுதியில் ஆரம்பித்து அத்துருகிரிய வல்கம, மாத்தளை பொல்கொடுவ, பதவியா பராக்கிரமபுர மற்றும் திருகோணமலை மஹாதியுல்வௌ ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருந்தன. இந்த 15 நாட்கள் இடம்பெற்ற எலிபன்ட் ஹவுஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள், கொடியாகும்புர, இபலோகம மற்றும் அபயபுர ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருந்தன. புத்தளம் பாலாவி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுடன் இந்த கொண்டாட்டங்கள் நிறைவடைந்திருந்தன. இந்த மினி கொண்டாட்டங்களின் போது, பங்குபற்றியிருந்தவர்களுக்கு பெருமளவு குதூகலமும், மகிழ்ச்சியும் ஊட்டப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X