2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இளம் தொழில்முயற்சியாளர்களுக்கு உதவ முன்வந்துள்ள SLIIT

A.P.Mathan   / 2015 ஜூன் 12 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பட்டப்படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வியகம் எனும் வகையில், மாணவர்களுக்கு கல்விசார் வாய்ப்புகளை வழங்கி வரும் SLIIT, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், 'Slingshot' எனும் திட்டம் பின்பற்றப்படுவதுடன், SLIIT மாணவர்களுக்கு தமது இறுதி ஆண்டுக்குரிய செயற்திட்டங்களை வியாபார தாபனங்களுக்கு பொருத்தமான வகையில் சமர்ப்பிப்பதற்கான நிதியுதவிகளை ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மேற்கொண்டிருந்தது.  

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடல் தொடர்பில் SLIIT இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் தலைவருமான பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில் 'புத்தமைவு மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முனைகிறோம். இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கப்படும் வகையில் அமைந்திருக்கும். இதன் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தேசத்தின் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் அமைந்திருக்கும்' என்றார்.

ஒவ்வொரு வருடமும் 100க்கும் அதிகமான செயற்திட்டங்கள் இறுதியாண்டில் பயிலும் மாணவர்களால் குழுக்களாக அல்லது தனிநபர்கள் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் திட்டங்களில் சிறப்பாக அமைந்த திட்டங்களை SLIIT தெரிவு செய்து, ஹேமாஸ் தாபனத்துக்கு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழங்கும். 

இந்த உடன்படிக்கை தொடர்பில் ஹேமாஸ் தாபனத்தின் கொள்கை மற்றும் புதிய வணிக அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி. ஹிமேஷ் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 'வாழ்வுக்கு செழிப்பூட்டுவது எனும் எமது கொள்கைக்கமைவாக, இளம் கண்டுபிடிப்பாளர்களின் இயலுமைகள் மற்றும் புத்தாக்கத்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்க நாம் தீர்மானித்திருந்தோம். எனவே SLIIT உடன் கைகோர்த்துள்ளதன் மூலமாக மாணவர்கள் மத்தியில் புத்தாக்கத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் பரஸ்பர அனுகூலம் பயக்கும் ஒன்றிணைவு ஏற்படுத்தப்படுகிறது' என்றார்.

முதல் படியாக, Pulz சொலுஷன்ஸ் பிரைவேற் லிமிடெட் எனும் தாபனத்துக்கான முதலீடுகளை ஹேமாஸ் வழங்கியுள்ளது. இந்த தாபனத்தி SLIIT மாணவ அணியினர் இணைந்து நிறுவியுள்ளனர். இதய கோளாறு, மூட்டு வலிகள் மற்றும் ஆஸ்மா போன்ற தொற்றா நோய்களை கொண்ட நோயாளர்கள் மத்தியில் தன்னியக்க அடிப்படையில் சுகாதார கணிப்புகளை பெற்றுக் கொள்வதற்கு தீர்வுகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு தீர்வுகளை வழங்கும் தயாரிப்புகளில் ஒன்றாக ''Panacea’s Jacket' என்பது அமைந்துள்ளது. இதன் மூலம் இருதய துடிப்பு எண்ணிக்கை, நாடித்துடிப்பு போன்றவற்றை மொபைல் ஆப்ளிகேஷன் மூலமாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது.

ஹேமாஸ் குழுமத்தில் சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் காணப்படும் நிலையில், இந்த துறைசார்ந்த திட்டங்களுக்கு உதவிகளை வழங்க ஹேமாஸ் பெருமளவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தது. மாணவர்களுக்கு அவர்களின் தேவை தொடர்பில் விளக்கங்களை வழங்குவதற்கு ஹேமாஸ் SLIIT இல் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. இவற்றின் மூலம் மாணவர்களுக்கு தமது திட்டங்களை முறையாக திட்டமிட்டுக் கொள்ள முடிவதுடன், வியாபார நோக்கிலமைந்த திட்டங்களை தயார்ப்படுத்திக் கொள்ள உதவியாகவும் இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X