2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஏழு விருதுகளை வென்ற டிரையம்ப் ஸ்ரீ லங்கா

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிரையம்ப் ஸ்ரீ லங்கா நிறுவனமானது, அண்மையில் வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் (SLIM) ஒழுங்கு செய்யப்படும் தேசிய விற்பனை காங்கிரஸ் விருது (NASCO) வழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்துள்ளது. 

உள்ளாடைத் தெரிவுகள் உற்பத்தியில் சர்வதேச முன்னோடியான டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரையம்ப் இன்டர்நெஷனல் லங்கா(பிரைவட்) லிமிடெட்(TIL) நிறுவனம் இந்த நிகழ்வில் 'ஆடைகள் மற்றும் பேஷன்' துறையில் வழங்கப்படுகின்ற 7 விருதுகளையும் வென்றெடுத்து உள்நாட்டு ஆடைத் தொழிற்துறையில் தமது அடையாளத்தை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. இவ் விழாவில் தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக டிரையம்ப் ஸ்ரீலங்கா நிறுவனம் அதன் விற்பனை மேலாண்மை துறையின் செயற்திறனுக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் முன்னணி வரிசையாளர்கள் மட்ட பிரிவில் தங்க, வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை முறையே நயனப்ரியா ரூபசாரி, கிறிஷாந்தி லாசாரொஸ் மற்றும் சச்சி கோசல பெர்னாண்டோ ஆகியோர் வென்றனர். பிரதேச நிர்வாக மட்டத்தில் வெண்கல விருதை சுரேன் புஸ்பகுமார வென்றார். மேலும் விற்பனை பிரதிநிதி மட்டப் பிரிவில் தங்க விருதை நிலந்த ஷானக உம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை முறையே நிலங்க தில்ஷான் உம், பிரபாத் ராஜபக்ஷ உம் வென்றெடுத்தனர்.

இலங்கையில் விற்பனை மேலாண்மையில் செயற்திறனை அடையாளப்படுத்தல் மற்றும் நாட்டின் விற்பனை தொழிற்துறையை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கினை கொண்டுள்ள முதன்மை நிகழ்வாக SLIM NASCO வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு திகழ்கிறது. இலங்கையில் விற்பனை தொழற்துறையின் தரத்தை உயர்த்துவதுடன், மிகச்சிறந்த விற்பனை நிபுணர்களை கௌரவப்படுத்தி வெகுமதிகளை வழங்கி அவர்களது மதிப்பினை மேம்படுத்துவதே NASCO 2015 இன் குறிக்கோளாக அமைந்துள்ளது.

இந்த வெற்றி தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஷலிந்த்ர பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'இந்த வருட NASCO விருதுகள் விழாவில் எமது சாதனைகள் குறித்த நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். ''ஆடைகள் மற்றும் பேஷன்' துறையில் வழங்கப்படும் 7 விருதுகளையும் வென்றமையானது எமது விற்பனை பிரிவு தலைவரான சஜீவ திலகரத்ன மற்றும் அவரது குழுவினரின் கடின உழைப்பிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக அமைந்துள்ளது. வர்த்தகத்தில் மிகவும் சவால் மிக்க பிரிவாக விற்பனை அமைந்துள்ளதுடன், எமது குழுவினர் தொடர்ந்து இப் பிரிவில் தமது செயற்திறனை வெளிப்படுத்தி வருவதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகின்றோம். கடந்த ஆறு வருடங்களாக நாம் வென்ற விருதுகள் மற்றும் அங்கீகாரம் இதனை சான்று பகர்கிறது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X