2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

2024 இல் Daraz இன் முதல் இலவச விநியோக கொண்டாட்டம் அறிமுகம்

Freelancer   / 2024 ஜனவரி 26 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்லைன் e-வணிக கட்டமைப்பான Daraz, புத்தாண்டை வரவேற்கும் வகையில், முதன் முறையாக Daraz இலவச விநியோக கொண்டாட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 2024 ஜனவரி 27 ஆம் திகதி முதல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு நவநாகரீகம், அழகுசாதனப் பொருட்கள், வீட்டு மற்றும் அலங்காரப் பொருட்கள் மற்றும் பல மில்லியன் கணக்கான பொருட்களை இலவசமாக விநியோகித்துக் கொள்ளக்கூடிய வசதியை அனுபவிக்க முடியும். தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த சமூகங்கள் மீதான Daraz இன் அர்ப்பணிப்பு இந்தத் திட்டத்தினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் ஒப்பற்ற விநியோகம் மற்றும் பொருட்களை இலகுவாக அணுகும் திறன் போன்றவற்றுக்கான உட்கட்டமைப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் மற்றும் விருத்தியை கொண்டுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் Daraz இலவச விநியோக கொண்டாட்டத்தின் நோக்கம் என்பது, நபர்களுக்கு தமது இருப்பிடம் எதுவாக இருப்பினும், அணுகும் திறனை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் சமூகத்தாருக்கு தமது தினசரி தேவைகளை மிகவும் சகாயமான முறையில் அணுகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடு்பபதாகவும் அமைந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாகவும், பெறுமதி சேர் வரி மாற்ற அதிகரிப்பாலும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் தாக்கத்தை குறைக்கும் வகையில், இந்தக் கொண்டாட்டத்தினூடாக, சொப்பிங் செய்வோரின் சேமிப்பை அதிகரித்துக் கொள்ள பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு தமது இல்லங்களில் இருந்தவாறே சௌகரியமாக பொருட்களை கொள்வனவு செய்யும் வசதியை வழங்குவதுடன், அதிகரித்துச் செல்லும் விநியோக செலவுச் சுமையை இல்லாமல் செய்வதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தினூடாக, விநியோக கட்டணம் காரணமாக e-வணிகத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் வாடிக்கையாளர்களை மீண்டும் ஈடுபடுத்தி, ஒன்லைன் சொப்பிங் அனுபவத்தில் அவர்களின் ஈடுபாட்டை தொடர்ந்தும் ஊக்குவிக்கவும், அதனூடாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் Daraz எதிர்பார்க்கின்றது.

e-வணிக செயற்பாடுகளில் இலவச விநியோக நடவடிக்கையை பல சொப்பிங் செய்வோர் மிகவும் பயனுள்ளதாகவும், அனுகூலமளிப்பதாகவும் தெரிவித்துள்ளமையை புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. உதாரணமாக, 2023 டிசம்பர் மாதத்தில் மாத்திரம், 65% க்கும் அதிகமான Daraz வாடிக்கையாளர்கள் இலவச விநியோகத்தை அனுபவித்துள்ளதுடன், 2023 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 700% அதிகரிப்பையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும், Daraz இலவச விநியோக கொண்டாட்டத்தினூடாக, விற்பனையாளர்களுக்கும் முன்னர் சென்றடையாத பகுதிகளுக்கு தமது பொருட்களை சென்றடையச் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு (SMEs) தமது வியாபாரங்களை இதுவரையில் இனங்காணாத பகுதிகளுக்கு வியாபித்து, தமது பிரசன்னத்தை மேம்படுத்தவும், தமது சென்றடைவு மற்றும் வருமானத்தை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் கொள்வதற்கும் வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது. உதாரணமாக, Daraz இல் விற்பனையாளர்கள் தமது நகரத்திலிருந்து வெளிப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 65% ஆன பொருட்களை விற்பனை செய்திருந்தனர். இந்த போக்கிற்கமைய, பல விற்பனையாளர்கள் தமது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு இலவச விநியோகத்தை அதிகளவு நாடுவதை அவதானிக்க முடிகின்றது. 2023 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மாத்திரம் இலவச விநியோகத்தில் பங்கேற்றிருந்த விற்பனையாளர்களின் எண்ணிக்கையில் 30% வளர்ச்சி பதிவாகியிருந்தது.

Daraz ஸ்ரீ லங்கா செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் சஜித் சுஹைலி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் விநியோகம் என்பது, நாட்டில் e-வணிக பயன்பாட்டை தொடர்ச்சியாகவும், மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. பெருமளவு சரக்கு கையாளல் மற்றும் செயற்பாட்டு வலையமைப்பு என்பது இதற்கு அவசியமாவதுடன், இலங்கையின் நீடித்த பரந்த வாகனத் தொடரணியையும், விநியோக பங்காளர்களையும் Daraz கொண்டுள்ளதுடன், அவர்களினூடாக வேகமான விநியோகத்தைக் கொண்டு விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களை இணைக்கின்றது. எமது இலவச விநியோக கொண்டாட்ட காலப்பகுதியில் இந்தச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. இந்த பிரத்தியேகமான, நாடளாவிய சரக்கு கையாளல் உட்கட்டமைப்பு என்பது எமது நவீன தொழில்நுட்ப வசதியுடன் வலுவூட்டப்பட்டுள்ளதுடன், உடனுக்குடன் கண்காணித்தல் மற்றும் போக்குவரத்து வழியை செம்மையாக்கிக் கொண்டு, Daraz இன் நோக்கமான பொதிகளை வேகமாகவும் சகாயமான விலைகளில் விநியோகிக்கவும் பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .