2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மசகு எண்ணெய் விலை 60 அ.டொ. விட சரிவு

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 25 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009 ஜூலை மாதத்தை தொடர்ந்து முதல் தடவையாக மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 60 அமெரிக்க டொலர்களை விட சரிவடைந்திருந்தது. சீன தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெறுகின்றமை மற்றும் சர்வதேச நாணய பெறுமதிகளின் மதிப்பு குறைந்தமை போன்றன மசகு எண்ணெய்க்கான சர்வதேச கேள்வியை குறைத்திருந்தன.

ஜூன் மாதம் முதல் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், உற்பத்தி நாடுகளின் அமைப்பான ஒபெக், விலையை அதிகரிப்பதற்காக உற்பத்தியை குறைப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

கடந்த ஏழு மாதங்களில் முதல் தடவையாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக நாடாக திகழும் சீனாவின், தொழிற்சாலை செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்திருந்ததை தொடர்ந்து, சர்வதேச எரிபொருள் விற்பனை விலையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஜனவரி மாதத்துக்கான சீனாவுக்கான ஏற்றுமதி பீப்பா ஒன்றுக்கு 59.75 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. அமெரிக்காவுக்கான பெறுமதி பீப்பா ஒன்றுக்கு 54.85 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X