2024 மே 20, திங்கட்கிழமை

7ஆவது CIPM சர்வதேச ஆய்வு மாநாடு 2023 க்கு SLT-MOBITEL அனுசரணை

Freelancer   / 2023 ஜூன் 16 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, 7ஆவது CIPM சர்வதேச ஆய்வு மாநாடு 2023 நிகழ்வுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் அனுசரணை வழங்கியிருந்தது. இந்த ஆண்டின் நிகழ்வு, மெய்நிகர் மற்றும் நேரடி பங்குபற்றலுடன், ஹைபிரிட் நிகழ்வாக நடைபெற்றது. இல. 43, விஜய குமாரதுங்க மாவத்தை, கொழும்பு 5 எனும் முகவரியில் அமைந்துள்ள HR House இலுள்ள CIPM கேட்போர்கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

“எதிர்காலப் பணியை மாற்றியமைப்பது” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில், உள்நாட்டையும், சர்வதேச ரீதியிலான நிபுணர்கள், புலமையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மனித வளங்கள் முகாமைத்துவத்தில் பின்பற்றப்படும் புத்தாக்கமான வழிமுறைகள் மற்றும் உள்ளார்ந்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் மனித வளங்கள் முகாமைத்துவ செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான பிரத்தியேகமான கட்டமைப்பாக உள்ளது. CIPM பட்டதாரிகள் முதல் அரச மற்றும் அரச சாரா பல்கலைக்கழகங்களின் புலமையாளர்கள் அடங்கலாக மனித வளங்கள் நிபுணர்களின் நூறு ஆய்வுப் பத்திரங்களை இந்த மாநாடு பதிவு செய்திருந்தமையால், இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த முக்கியத்துவம் வாய்ந்த நபர்களில், SLT-MOBITEL இன் குழும பிரதம கூட்டாண்மை அதிகாரி பிரபாத் அம்பேகொட அடங்கியிருந்தார். இவர் குழுநிலை கலந்துரையாடலிலும் பங்கேற்றார். இவரின் பங்கேற்பானது பெறுமதி வாய்ந்த கலந்துரையாடலையும், பெறுமதி வாய்ந்த உள்ளார்ந்த தகவல்களையும் ஊக்குவித்திருந்தன. SLT இன் திறன் விருத்தி நிலையத்தின் பிரதி பொது முகாமையாளரும் தேசிய மனித வளங்கள் தரவு மையத்தின் CIPM செயற்குழுவின் அங்கத்தவரும், ஆய்வு மற்றும் விருத்தி ஆற்றல்களையும் கொண்ட ஆசிரி இந்திக "Case Study Publication Book 2023"ஐ CIPM இன் தலைவர் கென் விஜயகுமாரிடம் கையளித்திருந்தார். SLT இன் பொறியியலாளரும் திறன் விருத்தி செயற்பாட்டாளருமான ஸ்ரீவி சந்தமினி, "Developing Competency Assessment and Development Framework for Staff Engaged in Sales – Sri Lanka Telecom PLC" எனும் தலைப்பில் அமைந்த ஆய்வுப் பத்திரத்தை வெளியிட்டிருந்தார். இந்த மாநாட்டின் போது, SLT-MOBITEL அணியினரின் இந்த குறிப்பிடத்தக்களவு பங்களிப்புகளினூடாக, தொழிற்துறையில் நிறுவனத்தின் உறுதியான பிரசன்னத்தையும் செல்வாக்குச் செலுத்தலையும் மேலுதி உறுதி செய்யப்பட்டிருந்தது.

7ஆவது CIPM சர்வதேச ஆய்வு மாநாட்டினூடாக, மனித வளங்கள் முகாமைத்துவ செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தமது ஆய்வு கண்டறிதல்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் பகிர்ந்து, பெறுமதி வாய்ந்த வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. மனித வளங்கள் முகாமைத்துவ ஆய்வு ஆற்றல்களில் கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டினூடாக, பங்குபற்றுநர்களுக்கு சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில் தமது நிபுணத்துவம் மற்றும் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வலுவூட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X