2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

AIA இன்ஷுரன்ஸ் வருடாந்த மாநாடு ஒன்லைனில் முன்னெடுப்பு

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

AIA இன்ஷுரன்ஸ் ஒவ்வொரு வருடமும் தனது நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டை, ஆண்டு முழுவதும் சாதனைகள் புரிந்த ஊழியர்களைக் கௌரவிக்கும் விதமாக, அவர்களுக்கு வெகுமதியளித்து கவர்ச்சிகரமான, குதூகலமான மாலைப் பொழுதுகளில் மிகவும் பிரம்மாண்டமான முறையிலேயே நடத்துகின்றது.

உண்மையில் இது நிறுவனத்தின் நாள்காட்டியில் மிகச்சிறப்பானதும், முக்கியத்துவமிக்கதுமான நாளாகவே அமைந்துள்ளது. மேலும் நிறுவனத்தின் வெற்றிக்காக அளப்பரிய பங்களிப்பை மேற்கொள்கின்ற ஊழியர்களின் கடின உழைப்பைப் பாராட்டுவதற்கான நாளாகவும் இது திகழ்கின்றது.   

இந்த வருடம்,  கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக மிகவும் கொண்டாட்டமிக்க மாலைப் பொழுதின் குதூகலத்தையும்,  கவர்ச்சியையும் AIA கைவிட வேண்டியேயிருந்தது. எனினும் ஊழியர்களை ஊக்குவிக்கக்கூடிய வெகுமதிகளையும், கௌரவமிக்க அங்கிகாரத்​ைதயும் நிறுவனம் பிற்போடவில்லை.

இதன் காரணமாக AIA இன் அனைத்து ஊழியர்களும் மிகவும் உற்சாகமாக இணைந்து கொண்ட “AIA இன் டிஜிட்டல் நிறுவன மாநாடு 2020” ஐ நாடு முழுவதும் உள்ள நிறுவனத்தின் கிளைகள், தலைமை அலுவலகத்தில் நேரடியாக ஒளிபரப்புச் செய்து தனது முதலாவது வருடாந்த டிஜிட்டல் மாநாட்டை மிகவும் வெற்றிகரமானதாகவே AIA நிறைவு செய்திருந்தது.  

AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி, பிரதிப் பிரதான நிறைவேற்று அதிகாரி உபுல் விஜேசிங்க ஆகியோர் இந்நிகழ்வுகளில் வழக்கமாக மேற்கொள்ளும் காட்சி விளக்கத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது தனிநபர்கள், அணியின் சாதனைகளைப் பாராட்டி வருடத்துக்கான நிறுவனத்தின் செயற்றிறனையும் எடுத்துக் காட்டியிருந்தனர்.

இந்த நிகழ்வை மனிதவளப் பணிப்பாளர் துஷாரி பெரேரா, சட்ட, செயற்பாடுகள்,  வெளி உறவுகள் பிரதான அதிகாரி, பணிப்பாளர் சத்துரி முனவீர ஆகியோர் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தனர்.  

இதன்போது, கேளிக்கை நிகழ்வையும் AIA ஏற்பாடு செய்திருந்தது. ‘பிளக்’ இசைக்குழுவின் ரணில் அமிர்தையா இந்த டிஜிட்டல் மாநாட்டுக்கு இசைச் சுவையூட்டி ஊழியர்களைப் பரவசப்படுத்தியிருந்தார். மொத்தத்தில் இந்த முன்னோடியான டிஜிட்டல் மாநாடானது, நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களையும் மிகவும் ஈடுபாட்டுடன் ஒன்றிணைத்திருந்ததுடன், AIA இல் உள்ள அனைவருக்கும் இது ஒரு புதிய​தோர் அனுபவமாகவும் அமைந்திருந்தது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .