2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

AIA நிறுவனம் DFCC வங்கியுடன் இணைவு

Gavitha   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

AIA இன்ஷுவரன்ஸ் லங்கா பிஎல்சி நிறுவனம் மிகவும் தனித்துவமான, நீண்டகால வங்கிக் காப்புறுதிக் கூட்டாண்மை ஒன்றை DFCC வங்கி, பிஎல்சி உடன் மேற்கொண்டுள்ளது. மேலும் இது AIA-DFCC உறவில் மற்றுமொரு முக்கிய மைல் கல்லாகும். 

இக்கூட்டாண்மையின் ஊடாக, ஆசியாவில் DFCC வாடிக்கையாளர்கள் மிகவும் புதுமையான சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டங்களையும், மற்றும் சேவைகளையும் AIA நிறுவனத்தின் சிறந்த அனுபவம் மற்றும் நிபுணத்துவ அறிவுடன் பெற்றுக் கொள்வார்கள். 

“இலங்கையில் வங்கிக் காப்புறுதி முன்னோடியாக உள்ள நிறுவனம், DFCC வங்கியுடன் மேற்கொண்டுள்ள கூட்டாண்மையின் ஊடாக, இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அவர்களது பாதுகாப்பு, நீண்டகாலச் சேமிப்பு மற்றும் பணி ஓய்வூத் திட்டங்கள் குறித்தான நிதி ஆலோசனைகளை வசதியாகவும், தேவையான விதத்திலும் பல்வேறு வழிமுறைகளில் வழங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றது என்பதையே மீண்டும் வலியுறுத்துகின்றது. DFCC வங்கியுடனான எமது கூட்டாண்மையானது, இலகுவாக அணுகக்கூடிய உயர்தரமான திட்டங்கள் மற்றும் சேவைகள் DFCC வங்கியின் வாடிக்கையாளர்களைச் சென்றடைய நாம் இணைந்து மேற்கொள்ளும் அர்ப்பணிப்பினையே வெளிப்படுத்துகின்றது” என AIA ஸ்ரீ லங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி, பன்கச் பெனர்ஜி தெரிவித்தார். 

AIAஇன் கூட்டாண்மைப் பணிப்பாளர் அமல் பெரேரா இது பற்றிக் கருத்துக் கூறுகையில் “DFCC வங்கியுடனான எமது கூட்டாண்மையானது, கடந்த 2014ஆம் ஆண்டு விநியோக ஏற்பாடுகள் வழங்குநராக ஆரம்பித்து, இன்று 20 வருட மூலோபாயக் கூட்டிணைப்பிற்காகப் பரிணாமம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றமானது எமது இரு நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு அர்ப்பணிப்புக்கு மாத்திரம் சான்றாக அல்லாமல், இலங்கையில் வங்கிக் காப்புறுதியின் எதிர்கால, வளமான வளர்ச்சிக்கும் சிறந்ததொரு சான்றாகவே திகழ்கின்றது” எனத் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X