2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ANANKE IoT சேவைகளுக்கு SLT-MOBITEL வலுவூட்டல்

S.Sekar   / 2021 ஜூலை 30 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பங்காளரான ANANKE IoT Services (Pvt) Ltd, 16ஆவது வருடாந்த 2021 IT World விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த ஆரம்பநிலை நிறுவனம் – IT பிரிவு” என்பதில் தங்க விருதை சுவீகரித்துள்ளதாக SLT-MOBITEL அறிவித்துள்ளது. உலகின் முன்னணி வியாபார விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் மற்றும் வியாபார தரப்படுத்தல்களை வெளியிடும் அமைப்பான Globee® விருதுகளினால், ANANKE IoT இன் Smart Bins திட்டத்துக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் IoT சேவைகளின் ஒப்பற்ற முன்னோடியும், டிஜிட்டல் புரட்சியாளராகவும் திகழும் SLT-MOBITEL இன் NB-IoT தொழில்நுட்பத்தினால் இந்தத் திட்டத்துக்கு வலுவூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLT-MOBITEL இன் NB-IoT வலையமைப்பினால் Smart Bins திட்டத்தின் சகல சாதனங்களின் இணைப்புத்திறனுக்கும் வலுச் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு வலுவூட்டியுள்ள இலங்கையின் ஒரே வலையமைப்பாகவும் SLT-MOBITEL திகழ்கின்றது. Low-Power-Wide-Area Internet of Things இணைப்புத்திறனின் GSMA நியமமாக NB-IoT திகழ்கின்றது. 10 வருடங்கள் வரை பற்றரி ஆயுளுக்கு பொருத்தமானதாக இது அமைந்துள்ளது. இலங்கையில் இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநராகத் திகழும் SLT-MOBITEL, அதன் Smart Bins தீர்வுக்கு ANANKE IoT சேவைகளை துரிதமாக பிரயோகிப்பதற்காக ஆதரவளித்துள்ளது. இலங்கையிலுள்ள முதலாவது பாரியளவிலான NB-IoT செயற்படுத்தப்பட்ட வன்பொருள் (hardware) செயற்திட்டமாக இது அமைந்துள்ளதுடன், ANANKE IoT இன் உள்ளக நிர்மாணிக்கப்பட்ட உரிமையாண்மை கட்டமைப்பை கொண்டதாக அமைந்துள்ளது.

மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரன கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் மொபைல் சேவைகள் வழங்குநர் எனும் வகையில், SLT-MOBITEL இனால் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தொழில்நுட்பசார் தீர்வுகள் வடிவமைக்கப்படுகின்றன. தொற்றுப்பரவலுடன், எமது சில பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் சேவைகளை பின்பற்றுவதற்கு ஆரம்பித்தமையை நாம் அவதானித்தோம். குறிப்பாக IoT மற்றும் தன்னியக்கமயமாக்கம் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தி, வியாபார செயன்முறைகளில் அநாவசியமான மனித ஈடுபாடுகளை தவிர்த்திருந்தனர். சந்தைக் கேள்விக்கு முன்னதாக NB-IoT வலையமைப்பை நாம் முன்னெடுத்திருந்தமையால், ANANKE IoT சேவைகள் போன்ற புத்தாக்கமான ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு எம்மால் வலுவூட்ட முடிந்ததுடன், அவர்களின் NB-IoT Smart Bins களை துரித கதியில் நிறுவுவதற்கு பங்களிப்பு வழங்க முடிந்தது.” என்றார்.

மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகள் மற்றும் பாடசாலைகளுடன் கைகோர்த்து ஊவா, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் PET பிளாஸ்ரிக் போத்தல்களை சேகரித்து மீள்சுழற்சிக்குட்படுத்தல் இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்காகும். இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த PET பொதியிடல் கழிவை திரட்டி ‘give-back life’ திட்டத்துக்கு பங்களிப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த smart binகளில் உணரிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், இந்த குப்பைகளை சேகரிப்பதற்கு உரிய காலம் வந்தவுடன் அது தொடர்பில் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கு சமிக்ஞை ஊடான அறிவித்தல் வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X