Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையின், புதிய தன்னியக்க பணப்பரிமாற்றல் சேவை (ஏ.ரீ.எம்) நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வங்கிக்கிளையின் முகாமையாளர், ஏ.எம்.முஸ்தகீம் தலைமையில் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் டி.யூ.கே.எஸ். திசாநாயகவின் ஆலோசனையின் பேரில் அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஜீ.ஏ.சி.ரத்னஜீயினால் நாடாவெட்டி ஏ.ரீ.எம். இயந்திர சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வாடிக்கையாளர் ஒருவர் முதன்முதலாக ஏ.ரி.எம். மூலம் பணம் பெறுவனவு செய்து வைத்தாா். இதனையடுத்து மாவட்ட பிராந்திய முகாமையாளரின் சேவையைப் பாராட்டி அட்டாளைச்சேனை பிரதேச வர்த்தக சங்கத்தின் உறுப்பினர் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கினாா்.
நிகழ்வில் சிரேஷ்ட முகாமையாளர் எம்.ஐ.எம்.ஹனீபா மற்றும் முன்னாள் முகாமையாளர்களான ஏ.பி.அப்துல் கபூர், ஏ.சி.கியாசுதீன், எம்;.ஏ.சி. சமீர் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் பலா் கலந்து கொண்டனா்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .