Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 25 , பி.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர்களின் பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல் மீது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை கொண்டுள்ள Access International Projects மற்றும் Daiking Air-conditioning India ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, மெதகம, பிபிலை, யட்டியெல்ல கனிஷ்ட பாடசாலைக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
மேலும், அதன் தாய்நிறுவனமான Access Group இன் தேசம் வளம் பெற எதிர்காலத் தலைமுறைகளுக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோளுக்கு அமைவாக, Access International Projects மற்றும் Daiking Air-conditioning India ஒன்றிணைந்து அதன் முதலாவது வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அப்பாடசாலையில் குழாய்க்கிணறு ஒன்றைத் தோண்டி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கியுள்ளன.
மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள யட்டியெல்ல கனிஷ்ட பாடசாலை ஒரு கலவன் பாடசாலையாக இயங்கி வருவதுடன், தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளில் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
நாட்டில் வரட்சியான வலயத்தில் மிகவும் ஏழ்மையான பிரதேசமாக இனங்காணப்பட்டு
உள்ளதுடன், சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வது இப்பிராந்தியத்திலுள்ள சமூகங்களுக்கு தீர்வின்றிய தொடர் பிரச்சினையாகவே காணப்படுகின்றது.
இப்பாடசாலை 31 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும், தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக, அது பல சவால்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளது. தயாள குணமுள்ள அயலவர் ஒருவர் தேவையான தண்ணீரின் ஒரு பகுதியை வாராந்த அடிப்படையில் பிளாஸ்டிக் தாங்கியொன்றில் நிரப்பி, உதவி வந்துள்ளார்.
ஆசிரியர்களும் மாணவர்களும் குறிப்பாக சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கழிப்பறை உபயோகத்துக்காகச் சிறுவர்களுடன் சேர்ந்து பாடசாலையிலிருந்து சுமாரான தொலைவில் அமைந்துள்ள அண்டைப்புற வீடுகளுக்குச் சென்று போத்தல்களிலும், வாளிகளிலும் தண்ணீரை நிரப்பி எடுத்து வருவது ஆசிரியர்களின் அன்றாட சவாலாக அமைந்திருந்தது.இப்பாடசாலையை சிபாரிசு செய்த பிபிலை-மெதகம வலயக் கல்விப் பணிமனையின் ஆலோசனையுடன், உலக நீர் தினம் 2018 அன்று சுபவேளையில் இச்செயற்திட்டத்துக்கான பணிகளை Access International Projects நிறுவனம் ஆரம்பித்தது.
ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 2.3 மில்லியன் ரூபாய் செலவில் இச்செயற்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. Access International Projects மற்றும் Daiking Air-conditioning India ஒன்றிணைந்து 163 அடி ஆழத்தில் குழாய்க் கிணறு ஒன்றைத் தோண்டியதுடன், 2,000 லீட்டர்களுக்கும் மேற்பட்ட அளவு தண்ணீரைக் கொள்ளக்கூடிய தாங்கி ஒன்றையும் நிர்மாணித்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago