2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

Airtel Lanka விருதுக்கு தகுதி

S.Sekar   / 2021 மார்ச் 23 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நன்மதிப்பைக் கொண்ட தொழில் வழங்குநராக தமது பெயரை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த 2020 இலங்கையின் சிறந்த சேவை வழங்குநர் இலச்சினைக்கான விருது வழங்கும் நிகழ்வில் Airtel நிறுவனம் மனித வள முகாமைத்துவத்திற்கான புத்தாக்க அணுகுமுறைக்கு பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டின் முன்னணி நிறுவனமாக தமது தலைமைத்துவத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் ‘சிறந்த சேவை வழங்குநர் இலச்சினை’ தொடர்பில் Airtel தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் எயார்டெல்லின் திறன் மேம்பாட்டு முகாமையாளர் சாரா ராஜகுரு ‘ஆண்டின் இளம் மனித வள நிபுணர்’ (Young HR Professional of the Year’) விருதுக்கு தகுதிபெற்றார், அதன் மூலம் எயார்டெல்லின் அதிகாரம் மற்றும் வேலை செய்வதற்கு சிறந்த சூழலை ஏற்படுத்துவதில் தொடர்ந்து உறுதியளித்துள்ளது.

பெற்றுக் கொண்ட இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த Airtel நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஷ் சந்திரா, “2020 உண்மையிலேயே சவால்கள் நிறைந்த வருடமாக இருந்த போதிலும் எதிர்பாராத மாற்றங்களுக்கு துரிதமாக மாறுவதற்கு அவர்களிடமிருந்த திறமை, பாரிய முயற்சி மற்றும் எதிர்த்து செயற்படுதல் போன்ற பெறுமதிகளை எமது ஊழியர்கள் உண்மையாக இங்கு பிரதிபலித்தனர். அத்துடன் எமது பலமான மனித வள நடவடிக்கைகளும் இதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கின.” என தெரிவித்தார்.

உலக மனித வள மேம்பாட்டு (HRD) காங்கிரஸினால் நடத்தப்படும் இலங்கையில் சிறந்த சேவையாளர் இலச்சினை விருது வழங்கும் நிகழ்வின் நோக்கமானது மூலோபாய மனித வள முறைமைகள் மற்றும் விற்பனை தொடர்பாடல் முயற்சியின் ஊடாக திறனை மேம்படுத்துதல், அதனை தக்க வைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

Airtel லங்கா மனித வள முறைமைகள் தொடர்பில் மூலோபாயமானது, ஊழியர் நட்பு அணுகுமுறைகளை பின்பற்றுவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ள ஊழியர்களுக்கு உச்ச அளவு திறன்களை அடைவதற்கு தேவையான பயிற்சிகள், அறிவு மற்றும் ஏனைய அனைத்து கருவிகளையும் பெற்றுக் கொடுத்து சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .