2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

Amazon ஊடாக டைல்களை விற்பனை செய்யும் லங்காடைல்ஸ்

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உன்னத தரமான வோல் டைல், ஃபுளோர் டைல்களை உற்பத்தி செய்யும் முன்னோடி நிறுவனமாகிய லங்காடைல்ஸ் அதன் வோல் டைல்களை உலகப் புகழ்பெற்ற ஒன்லைன் விற்பனை ஜாம்பவானாகிய Amazon ஊடாகவும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம், சர்வதேச மட்டத்தில் ஒன்லைன் விற்பனை வசதியைக் கொண்ட ஆசியாவின் முதலாவது மற்றும் ஒரேயொரு டைல் நிறுவனம் என்ற பெருமை அதற்குக் கிடைத்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே, லங்காடைல்ஸ் தனது உற்பத்திப் பொருள்களை ஒன்லைனில் சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளது. எனினும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு மாத்திரமன்றி ஏனைய ஒன்லைன் சந்தைகளுக்கும் இந்த விற்பனைச் சேவையை விஸ்தரிக்க லங்காடைல்ஸ் உத்தேசித்துள்ளது.

தரமுயர்ந்த டைல்களை மிகவும் வசதியான முறையில் கொள்வனவு செய்யும் வாய்ப்பைச் சகல வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதே நிறுவனத்தின் இறுதிக் குறிக்கோளாகும். யுஅயணழn போன்றதொரு நம்பிக்கையான, உலகப் புகழ்பெற்ற இலத்திரனியல் வர்த்தகத் தளத்துடன் ஏற்படுத்தியிருக்கும் இப் பங்காளித்துவம், தரமுயர்ந்த உற்பத்திப் பொருள்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பாக விநியோகிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

உன்னதமான வர்;த்தகநாமம் என்ற முறையில் லங்காடைல்ஸ் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுத் தொழிற்றுறையில் முன்னணி வகிக்கின்றது. புதிய உற்பத்திப் பொருள்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதிலும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் லங்காடைல்ஸ் தொடர்ச்சியாக அக்கறை காட்டி வருகின்றது. இந்தவகையில் Amazon உடனான பங்காளித்துவம்; லங்காடைல்ஸின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X