Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனம், 2017/2018ஆம் ஆண்டுக்கான ‘Business Today Top 30’ விருது வழங்கல் நிகழ்வில் விருதைப் பெற்றுக் கொண்டுள்ளது. அண்மைக் காலங்களில் உறுதிமிக்க தொழிற்பாட்டை வெளிப்படுத்தியதுடன், பல்வேறு செயற்பரப்புகளில் சிறந்து விளங்கிய இந்நிறுவனம், தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் இந்தக் கௌரவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய சவால்கள், மாற்றமடைந்து கொண்டிருக்கும் இலங்கையின் அரசியல், பொருளாதார சூழலுக்கு மத்தியில் கூட்டாண்மைத் துறையில் சிறப்புச் செயலாற்றுகை, ஆளுகை போன்றவற்றை இவ்வருட ‘Business Today TOP 30’ விருதுகள் பிரதிபலிக்கச் செய்தன.
“Business Today TOP 30 நிறுவனங்களுள் ஒன்றாகத் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை எமக்கு கிடைத்திருக்கின்ற மிகப் பெரிய கௌரவமாகும். கூட்டாண்மைத் துறையில் உயர் தராதரங்களை அடைந்து கொள்வதற்கான எமது தொடர்ச்சியான தேடலானது, பெரும் பங்களிப்பைச் செலுத்துகின்றது என்பதை இது நிரூபிக்கின்றது. எமது சாதனைகளை சரியாக கண்டுணரும் விதத்திலமைந்த இந்த விருது வழங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக ‘Business Today’ இற்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இந்த அங்கிகாரமானது எமது அணியினர், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களுக்கு ஊக்கம், உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது” என்று கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் தலைவர் சிசில் பெரேரா தெரிவித்தார்.
முதன்மையான நிதியியல் சேவைகள் நிறுவனம் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள கொமர்ஷல் கிரெடிட், உயர்தர சேவை, செயலாற்றலுக்கான நியமங்களை உருவாக்குவதில் தொடர்ச்சியாக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .