Editorial / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
Abans PLC இன் வீட்டுத் தளபாட விற்பனைப் பிரிவான Abans Homes In Style பிரதான காட்சியறை அண்மையில் Colombo City Centre ஷொப்பிங் மோலில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
9,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ள Abans Homes In Style பிரதான காட்சியறையை, அபான்ஸ் வியாபாரக் குழுமத் தலைவி திருமதி. அபான் பெஸ்டோன்ஜி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் Abans PLC மற்றும் Colombo City Centre சார்பாகப் பல சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.
காட்சியறையைத் திறந்துவைத்த திருமதி. அபான்ஸ் பெஸ்டோன்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “ஆரோக்கியமான, மனதை கவரும் நவீன வீட்டுத் தளபாடங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற குறிக்கோளில் Abans Homes In Style அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறது. இந்த இலக்குகளை மிகச்சிறப்பாகச் செயற்படுத்தி, வீடுகளைச் செழிப்பூட்டும், மனதுக்கு இசைவான, ஆரோக்கியமிக்க புத்தம் புதிய பல உற்பத்திகளை Abans Homes In Style தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
வீடுகளுக்கு ஏற்ற பிரத்தியேகமான எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள Abans Homes In Style காட்சியறையில், உங்கள் இல்லங்களுக்குப் பொருத்தமான சகல தளபாடங்களையும் தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபம். அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு புதிய அனுபவமாக அமையும்.
இங்குள்ள கட்டமைப்புகள், இவைகளின் நிறைவு உங்கள் இல்லத்தை மிகச்சிறப்பாக எவ்வாறு வடிவமைப்பது என்பதை உங்களுக்கு உணர்த்தும். உங்கள் இல்லத்தின் வரவேற்பறை, உணவறை, படுக்கையறை ஆகியவற்றுக்குத் தனித்தனியே வெவ்வேறு இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் ஆக்கத்திறன் மிக்க கலைநயத்தோடு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதால் உங்கள் இல்லத்தையும் இவ்வாறு வடிவமைத்துக் கொள்ளக்கூடிய அறிவை உங்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.
காட்சியறையின் முன்புறம், உட்புற வடிவமைப்பானது ஒன்றுடன் ஒன்று சிறப்பான முறையில் சேரும் வகையில் உள்ளதோடு, ஹய்-குளோஸ் மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உற்பத்திகள் மிகவும் சிறப்பான முறையில் சொப்ட் போகஸ் ஒளியை வெளிப்படுத்துவதால் சகல உற்பத்திகளுக்கும் அதிக கவணம் செலுத்தப்படுகிறது.

Abans Homes In Style பிரதான காட்சிறையில் திட்டமிடல் அமைப்பு வடிவமைப்பாளர் ஒருவரின் உதவியோடு வாடிக்கையாளருக்குத் தமது மனதிலுள்ள எண்ணத்துக்கு அமைய, உங்கள் இல்லத்தின் வடிவமைப்புக்கும் அதன் தன்மைக்கும் ஏற்றவாறு உங்களுக்குத் தேவையான தளபாடங்களை எந்தெந்த இடங்களில் நிலைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகத் திட்டமிடல் வடிவமைப்பாளரின் தொழில் ரீதியான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
24 minute ago
36 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
41 minute ago
49 minute ago