2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

CDB Virtual Infinity Awards 2019/20 விழா

S.Sekar   / 2021 ஜூன் 22 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சியில் (CDB), சிறப்பாக செயலாற்றியிருந்த அணி அங்கத்தவர்கள் வருடாந்த CDB Infinity விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள். 71 CDB கிளைகளிலிருந்து 1700க்கும் அதிகமான அங்கத்தவர்கள் இந்த மெய்நிகர் வைபவத்தில் பங்கேற்றனர். கொழும்பு, ஒரபிபாஷா மாவத்தையிலுள்ள CDB தலைமையகத்திலிருந்து இந்த நிகழ்வு நேரலையாக இடம்பெற்றது.

CDB Infinity விருதுகள் வழங்கலினூடாக, சிறந்த தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்தி, சிறப்பாக செயலாற்றியிருந்த அணி அங்கத்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். முன்னைய ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த மொத்தமாக 140க்கும் அதிகமான அணி அங்கத்தவர்கள் இதனூடாக கௌரவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் நீண்ட காலமாக சேவையாற்றியமைக்காக 100 அணி அங்கத்தவர்களுக்கு அண்மையில் கொண்டாடிய 25 ஆவது வருடபூர்த்தியை முன்னிட்டு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. தவிசாளரின் சவால் கிண்ணம், பணிப்பாளர் சபையின் சவால் கிண்ணம் மற்றும் CDB 100Mn RRT சுப்பர் கோல்ட் விருது போன்றனவும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டிருந்தன. மேலும் இவ்வருடம் சுப்பர் கோல்ட் விருதை வெற்றியீட்டியவருக்கு புத்தம் புதிய Honda Civic கார் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

CDB இன் முகாமைத்தவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நானாயக்கார கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்காலத்துக்கு தயார் நிலையில் தொடர்ச்சியான மாற்றங்களால் எழும் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் CDB இனால் எமது அணி அங்கத்தவர்களின் புத்தாக்கங்களை இனங்கண்டு அவற்றை ஊக்குவிப்பது என்பது முக்கியமானதாகும். இதனூடாகவெ வியாபாரத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும். CDB Infinity விருதுகள் என்பது எமது அணியினரின் கடுமையான உழைப்புக்கு கிடைக்கும் வருடாந்த கௌரவிப்பாக அமைந்துள்ளது. அவர்களின் தலைசிறந்த சாதனைகளை கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

புத்தாக்கமான மற்றும் வெற்றிகரமாக இயங்கும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், நிலைபேறாண்மைக்கு அதிகளவு முக்கியத்துவமளித்து செயற்படும் CDB இனால் தொழிற்துறைக்கு முன்னோடியான தீர்வுகள் வழங்கப்பட்டு, சகல பங்காளர்களினதும் எதிர்பார்ப்புகளுக்கு வலுச்சேர்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் போட்டிகரமான அனுகூலம் மற்றும் நிலைபேறான வளர்ச்சிக்கு பிரதான மூலமாக அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

CDB இன் தவிசாளர் அலஸ்டெயர் கொரேரா கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்காலத்துக்கு தயாரான நிறுவனமாக திகழ்வதற்கு உதவும் புதிய ஆற்றல்களை கட்டியெழுப்புவதற்கு பல முயற்சிகளை இந்த ஆண்டில் நாம் மேற்கொண்டுள்ளோம். மக்களின் வாழ்க்கைக்கு வளமூட்டும் நிலைபேறான செயன்முறைகளினூடாக எமது வியாபாரத்துக்கு பெறுமதி சேர்க்க நாம் எதிர்பார்ப்பதுடன், நிதிச் சேவைகள் துறையில் ஒப்பற்ற முன்னோடியான நிறுவனமாக திகழச் செய்வதற்கு முன்வந்துள்ளோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .