Editorial / 2026 ஜனவரி 15 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சியெட் களனி ஹோல்டிங்ஸ் CEAT Kelani Holdings தனது முன்னணி விநியோகஸ்தர்களை அங்கீகரிக்கும் தரத்தை மேலும் உயர்த்தி, நிறுவனத்தின் மூன்று நிலை 'சியெட் உடன் பயணம்' CEAT Kelani Holdings பரிசுத் திட்டத்தின் உச்ச அனுபவமாக, சிறந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு மறக்க முடியாத சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணத்தை வழங்கியுள்ளது.
சமீபத்திய செயல்திறன் காலகட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்த விற்பனை இலக்குகளை எட்டியோ அல்லது மீறியோ சாதனை புரிந்த இந்த விநியோகஸ்தர்கள், ஐரோப்பாவின் மிகச் சிறப்பு வாய்ந்த சில இடங்களை உள்ளடக்கிய ஆறு இரவுகள், ஏழு நாட்கள் கொண்ட ஒரு அதிசயமான பயண அனுபவத்தைபெற்றனர்.
இந்த சுற்றுலா பயணமானது, சாகசம், இயற்கைக் காட்சிகள் மற்றும் சுவிஸ் பண்பாடு ஆகியவற்றின் உயிரோட்டமிக்க கலவையைக் கொண்டதாக அமைந்தது. சூரிச் நகரில் தொடங்கிய இந்தப் பயணம், அதன் பின்னர் லூசெர்ன், இன்டர்லாகன், கிரின்டல்வால்ட், மொன்ட்ரூ, செர்மாட், ஜெனீவா ஆகிய நகரங்களையும், மூச்சுத் திணறும் அளவுக்கு அழகான யுங்க்ஃப்ராவ்யோக் மலைச் சிகரத்தின் உச்சியையும் சென்றடைந்தது. இந்த பயணத் திட்டமானது, சியெட் வர்த்தக நாமத்தின் அடிப்படையாக இருக்கும் துல்லியத்தையும் சிறப்பையும் பிரதிபலிக்கும் வகையில், சுவிட்சர்லாந்தின் சிறந்த அம்சங்களை வெளிப்படுத்தியது.
இந்த சுவிஸ் சுற்றுலா, சியெட் களனி நிறுவனத்தின் பல இடங்களை உள்ளடக்கிய பரிசுத் திட்டத்தின் உச்ச கட்டமாக அமைந்தது. மூன்று நிலை கொண்ட இந்தத் திட்டத்தின் கீழ், நடுத்தர நிலை சாதனையாளர்கள் சிங்கப்பூரில் க்ரூஸ் பயணமும் நகரச் சுற்றுலாவும் கொண்ட அனுபவத்தை பெற்றனர். அடுத்த நிலை சாதனையாளர்கள், பண்பாட்டு நிகழ்வுகள், தீவு சுற்றுலா பயணங்கள் மற்றும் நதிக் க்ரூஸ் பயணங்களை உள்ளடக்கிய, அனைத்து செலவுகளும் நிறுவனத்தால் பொறுப்பேற்கப்பட்ட தாய்லாந்து சுற்றுலா பயணத்தை அனுபவித்தனர்.
சிறப்பை கொண்டாடும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட 'சியெட் உடன் பயணம்' Travel with CEAT முன்முயற்சி, இலங்கையின் டயர் தொழில்துறையில் நிறுவனத்தின் முன்னணி நிலையை முன்னேற்றுவதில் விநியோகஸ்தர்கள் வகிக்கும் அத்தியாவசிய பங்கினை அங்கீகரிக்கிறது. உலகத் தரத்திலான பயண அனுபவங்களின் மூலம் சிறந்த செயல்திறனை பாராட்டுவதன் வழியாக, நாடு முழுவதும் வர்த்தகநாமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனது விநியோகஸ்தர் வலையமைப்புடன் சியெட் களனி நிறுவனம் தனது கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
பிராண்ட் ஃபினான்ஸினால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாகவும், 2025 ஆம் ஆண்டில் LMD ஆல் இலங்கையில் 'மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாகவும்' தரவரிசைப் படுத்தப்பட்ட சியெட் ஆனது, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வர்த்தகநாமமாகும், ஆண்டுதோறும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சியெட் களனியானது சந்தைத் தலைமைத்துவத்தை அடைவதற்கு தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் திறன் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் துணைபுரிகின்றன. நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் பயணிகள் கார்கள், வேன்கள், SUV கள், வர்த்தக வாகனங்கள் (பயாஸ்-பிளை மற்றும் ரேடியல்) , மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாய வாகனங்களுக்கான நியூமேடிக் டயர்கள் அடங்கும்.
சியெட் களனியானது இலங்கையின் வாகன டயர் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்வதைத் தவிர, அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டு முயற்சியானது இலங்கையில் ரூ. 8.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்ததற்கு முன்பு, அடுத்த 18 மாதங்களுக்கு மேலும் ரூ. 4.5 பில்லியனை முதலீடு செய்தது, இதன் மூலம் நிறுவனமானது உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு நம்பகமான பங்காளியாகவும் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago