2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

CICஇனால் விவசாயிகளுக்கு பயிற்சிப்பட்டறை

Gavitha   / 2017 ஜனவரி 30 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

“CIC Shoora Govi Permuna” விவசாயிகள் மத்தியில் விவசாயம் சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவைப் பரப்பும் நோக்குடன், CIC தனது Manussakama செயற்றிட்டத்தின் கீழ் கண்ணொருவப் பயிற்சி நிலையத்தில் இரண்டு நாட்கள் கொண்ட  பயிற்சிப்பட்டறை ஒன்றை  அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.  

கிராமிய விவசாய சமூகத்தின் வாழ்வை மேம்படுத்துவதற்காக 2008ஆம் ஆண்டில், CIC Manussakama செயற்றிட்டத்தை CIC Agri Business நிறுவனம் ஆரம்பித்திருந்தது. இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கிராமிய விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், விரிவான வேலைத்திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போற்றத்தக்க பல மனிதாபிமான சேவைகளுக்கு உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் பல விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

“ஆசிய பசுபிக் பொறுப்புணர்வுமிக்க தொழில்முயற்சியாளர்கள் விருதுகள் 2013” நிகழ்வில் மிகச் சிறந்த சமூக சேவைச் செயற்றிட்டத்துக்கான விருதை, 48 நாடுகளைத் தோற்கடித்து தனதாக்கியிருந்த CIC Agri Businesses நிறுவனம், அதனைப் பெற்றுக்கொண்ட முதலாவது இலங்கை நிறுவனமாகவும் சாதனை படைத்திருந்தது. அதே ஆண்டில் ஆசிய பசுபிக் தொழிற்றுறைத் தலைமைத்துவ விருதையும் நிறுவனம் வென்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது. E-Swabhimani, E-India, Sumathi, Marco, Swarna Lanka மற்றும் Derana Music Awards நிகழ்வுகள் அடங்கலாக பல்வேறு மேடைகளிலும் ஏராளமான விருதுகளையும், இனங்காணல் அங்கிகாரங்களையும் CIC Manussakama பெற்றுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X