2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

Ceylon Motor Show 2017 வெற்றிகரமாக நிறைவு

Gavitha   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Ceylon Motor Show 2017 நிகழ்வை் பார்வையிட, பெருந்திரளான வாகன ஆர்வலர்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு கடந்த வாரம் விஜயம் செய்திருந்தனர். இலங்கையில் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் மற்றும் பிந்திய மோட்டார் வாகனத்துறையுடன் தொடர்புடைய கண்காட்சியாக இது அமைந்துள்ளதுடன், 1900களின் பழமையான கார்களையும் காட்சிப்படுத்தியிருந்தது.  

23,000க்கும் அதிகமான பார்வையாளர்களை மூன்றாம் நாளின் இறுதியில் பதிவு செய்திருந்த இந்தக் கண்காட்சி, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஜயம் செய்தவ பார்வையாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியிருந்தது. Ceylon Motor Show 2017 என்பது 60க்கும் அதிகமான வர்த்தக நாமங்களை 25 வர்த்தக நாம உரிமையாளர்களினால் காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்நிகழ்வுக்காக பார்வையாளர்களிடமிருந்து பெருமளவு வரவேற்பு பதிவாகியிருந்ததுடன், புகழ்பெற்ற வாகனங்களான, கார்கள், SUVகள், ட்ரக் வகைகள், பஸ் வகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் காணப்படும் சில சக்தி வாய்ந்த வாகனங்களின் சாரதி ஆசனத்தில் ஏறி அமர்ந்து அந்த அனுபவத்தைப் பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது.  

துறையின் பிந்திய வாகனத் தெரிவுகளில் 130க்கும் அதிகமான பாரம்பரிய மற்றும் நவீன கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதன் போது, இந்த பாரம்பரிய கார்களைத் தற்போதும் பராமரிப்பது எவ்வாறு என்பது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.  

“Ceylon Motor Show 2017க்கு எமக்கு ஒப்பற்ற மற்றும் பெருமளவு வரவேற்பு பொது மக்கள் மற்றும் எமது பிரதான அனுசரணையாளர் ஸ்ரீலங்கா இன்ஷுவரன்ஸ் மோட்டர் ப்ளஸ், இலத்திரனியல் ஊடக பங்காளர் மற்றும் வெளியகப் பங்காளர்கள் ஆகியோரிடமிருந்து பெருமளவு வரவேற்பு கிடைத்திருந்தது. இவர்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை வெற்றிகரமாக திகழச் செய்ய ஒன்றிணைந்திருந்தனர்”.  

“எமக்கு கிடைத்திருந்த வரவேற்பு என்பது எமது ஏற்பாட்டு அணியினருக்கு பெருமளவு ஊக்குவிப்பை வழங்குவதாக அமைந்திருந்தது. இந்த ஆண்டு Ceylon Motor Show கண்காட்சி தொடர்பில் அதன் தரம் மற்றும் ஏற்பாடுகள் குறித்து பல விருந்தினர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். பலர் சர்வதேச தரம் வாய்ந்ததாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த ஆண்டு கண்காட்சி என்பது, எதிர்கால நிகழ்வுகளுக்கு நியமத்தை வழங்குவதாக அமைந்திருக்கும்” என சிலோன் மோட்டார் வாகன விற்பனையாளர் சம்மேளனத்தின் தலைவர் ரீஸா ரவுஃவ் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X