Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 21 , மு.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை பரி.தோமாவின் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘பரிதோமாவின் இரவு’ நிகழ்வின் பிளாட்டினம் அனுசரணையாளராக DFCC வங்கி இணைந்திருந்தது. பாடசாலை அபிவிருத்தி நிதியம் ஒன்றை அமைப்பதற்குப் பழைய மாணவர் சங்கத்தின் பயணத்துக்கும் அது துணை புரிகின்றது.
பரி.தோமாவின் இரவில், தமது உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகளை அறிமுகப்படுத்துவதற்கு மாத்தளை பரி.தோமாவின் கல்லூரி மாணவர் அமைப்புடன் இணைந்து, இணை-வர்த்தக நாம கடனட்டையை DFCC வங்கி அறிமுகப்படுத்தியது.
DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்ஸ்மன் சில்வா, உத்தியோகபூர்வமாக முதலாவது கடனட்டையை மாத்தளை பரி.தோமாவின் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் லலித் கருணாதாசவிடமும், மேலும் மூன்று உறுப்பினர்களிடமும் கையளித்தார்.
இந்தக் கடனட்டையின் விசேட அம்சமாக அமைவது, ஒவ்வொரு முறை கடனட்டையைப் பயன்படுத்தும் போது, அந்த தொகையின் ஒரு சதவீதமானது, பாடசாலை அபிவிருத்தி நிதிய கணக்குக்கு வைப்பிலிடப்படும்.
தாம் கற்ற பாடசாலைக்கு மீள வழங்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் பல பழைய மாணவர்கள் இந்த விசேட சலுகைகளுக்குள் இணைந்தனர். இந்த முயற்சியின் ஊடாக, உட்கட்டமைப்பு வசதிகள், இந்தப் பாடசாலையின் ஊடாகத் தற்போதும், எதிர்காலத்திலும் கல்விப் பெறுகின்ற, பெறப்போகும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதுடன் பாடசாலை அபிவிருத்திக்கு உதவும் எளிய நிதிசார் கருவியை DFCC வங்கி வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago