Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
TATA வாகனங்கள், விவசாய இயந்திரங்களுக்கு மிகச்சிறப்பான, செயற்றிறன்மிக்க செலவு குறைந்த லீசிங் தீர்வுகளை வழங்குவதற்காக, DIMO (Diesel & Motor Engineering PLC) உடனான தனது 16 வருட நீண்ட கால பங்குடைமையை மேலும் நீடித்துள்ளதாக HNB அறிவித்துள்ளது.
இந்தப் புதிய உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில், HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், HNB பிரதி பொது முகாமையாளர்-சில்லறை வங்கி சஞ்சய் விஜயமான, HNB தலைவர்-தனிப்பட்ட நிதிச்சேவைகள் காஞ்சன கருணகம, HNB சிரேஷ்ட முகாமையாளர்-லீசிங் நிலுக அமரசிங்க, DIMO தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, DIMO நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித பண்டார, DIMO பிரதம செயற்பாட்டு அதிகாரி விரங்க விக்கிரமரத்ன உட்பட சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
HNB, DIMO என்பவற்கிடையிலான இந்த புதிய உடன்படிக்கை, வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான லீசிங் பக்கேஜ்கள், குறைவான வட்டி வீதங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் வசதிகள் என்பவற்றை அவர்களது வருமானம், வரவு செலவுக்கேற்ற வகையில் வடிவமைத்து வழங்குகிறது.
மேலதிகமாக HNB, பரிந்துரைக்கப்பட்ட ‘Lease card’ மூலமாக, வாகன பாராமரிப்பு சேவைகள், பாகங்கள், கார் விவரக்குறிப்புகள், ஏனைய அத்தியாவசிய சேவைகளில் விஷேட விலைக்கழிவுகளையும் வழங்குவதோடு, HNB அஷ்யூரன்ஸ் மூலமாக வாகனக் காப்புறுதியில் சிறப்புக்கட்டண முறைகளையும், துரித சேவைகளையும் உள்ளடக்கியுள்ளது.
TATA Euro 4 வர்த்தக வாகனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளருக்கு, Euro 3 உடன் ஒப்பிடும்போது 8% - 10% வரை மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் சக்தியின்; காரணமாக, மிகக்குறைவான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புச் செலவினமே ஏற்படும்.
மேலும் தற்போதைய சந்தையில் சூழலுக்கு மிகவும் நட்புரீதியான வாகனமாகக் கருதப்படுவதோடு, பல சிறந்த தரவரிசை பாதுகாப்பு மற்றும் வசதியான அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago