Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
Daraz.lk - இந்த வருடமும் 2018 ஆம் ஆண்டுக்கான ‘Daraz Mobile Week’ ஐ அறிமுகப்படுத்துகிறது. இந்த வேளையில், திறன்பேசி கனவை நனவாக்கக் காத்திருக்கும் அனைவருக்கும் கையிலுள்ள தொகைக்குப் பொருத்தமான, சர்வதேச தரத்திலான, புகழ்பெற்ற அலைபேசிகளை 70% வரையிலான விலைக் கழிவுகளுடன், நாட்டின் எப்பகுதியில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
தமது அலைபேசியை மேலும் தரமுயர்த்திக்கொள்ள விரும்புவோர் அல்லது தனது அன்புக்குரியோருக்கு அதிவிசேட பரிசு ஒன்றைப் பெற்றுக்கொடுக்க எண்ணியிருப்போர் பிரவேசிக்க வேண்டிய மிகப்பொருத்தமான தளம் இதுவாகும்.
சம்சங் வர்த்தகப் பெயருடன் ஜூன் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த விற்பனை வாரம், அப்பிள், ஹுவாவை, நொக்கியா மற்றும் எனஜைஸர் போன்ற வர்த்தகப் பெயர்களை தினந்தோறும் அந்தந்த நாளுக்குரிய வர்த்தகப் பெயர் என்ற வகையில் அறிமுகப்படுத்துகிறது.
இவை தவிர ஒவ்வொரு வர்த்தகப் பெயருக்கும் விசேட கணநேர விற்பனை நேரங்கள், அதாவது காலை 10.00 மணி முதல் பி.ப 01.00 மணி வரை மற்றும் இரவு 7.00 மணி முதல் 10.00 மணி வரை மிகவும் பிரபல்யமான அலைபேசிகள் அதிவிசேட விலைகளில் விற்கப்படும்.
மேலும், அலைபேசிகள் மற்றும் அதன் துணைப் பொருட்களுக்கு வாரம் முழுவதும் மாபெரும் விற்பனை விலைக் கழிவுகளைப் பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றிக் கருத்து வெளியிட்ட Daraz.lk இன் வதிவிட முகாமையளர் பார்ட் வான் டிஜிக் “வாழ்க்கையை நடமாடும் ஒரு சிறிய கருவிக்குள் இட்டுச் செல்லும் இக்காலப்பகுதியில், ஒரு சிறந்த அலைபேசியை வைத்திருப்பது மிக முக்கியமாகும். இதனால்தான் கடுமையாக விலை குறைக்கப்பட்ட அலைபேசிகளை இந்த அலைபேசி வாரத்தில் அனைவரது தேவைகளுக்கும் ஏற்ற வகையில் பெற்றுக்கொடுக்க Daraz எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தவும், சிறந்த ‘ஷொப்பிங்’ அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கவும் முடியும்” என்று கூறினார்.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025