2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘Doc Call 247’ ஊடாக கொவிட்-19 தொடர்பான இலவச மருத்துவ ஆலோசனைகள்

S.Sekar   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான தேசத்தின் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் தனது பங்களிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், இலங்கை மருத்துவ சம்மேளனத்துடன் (SLMA) கைகோர்த்து Doc Call 247 தொலைபேசி சேவையினூடாக தொலைபேசியினூடாக கொவிட்-19 தொடர்பான இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்க SLT-MOBITEL முன்வந்துள்ளது.

சுகாதார அமைச்சு, இலங்கை மருத்துவ சம்மேனம், சுவசெரிய மற்றும் SLT-MOBITEL ஆகியன இணைந்து இந்த முக்கியத்துவம் வாய்ந்த சேவையை வழங்குகின்றன. இந்தச் சேவையுடன் இதர தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர்களான டயலொக், எயார்டெல் மற்றும் ஹட்ச் ஆகியனவும் கைகோர்த்துள்ளதுடன், சகல இலங்கையர்களுக்கும் இந்த சேவை சென்றடைவதை உறுதி செய்துள்ளன.

கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது நாட்டில் தொடர்ந்தும் சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால், சுகாதாரப் பராமரிப்பு வளங்கள் மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்நோக்கியுள்ளன. சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் எழும் சுமையை கட்டுப்படுத்தும் வகையில், Doc Call 247உடன் ஆரம்ப அறிகுறிகளைக் கொண்ட நோயாளர்களுக்கு வீடுகளிலிருந்தவாறு பராமரிப்பை பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர மருத்துவ சேவைகள் தேவைப்படுவோருக்கு தீவிர மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. வீடுகளிலிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் தடங்கலில்லாத Doc Call 247சேவை ஊடாக, நோயாளர்களுக்கு இலங்கை மருத்துவ சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களின் உதவியுடன் நோய் தொடர்பான கேள்விகளுக்கு அவசியமான பதில்களைப் பெற்றுக் கொள்ள முடியும். நோயாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ள முடியும்.

உதவி தேவைப்படும் மக்களுக்கு பின்வரும் இலக்கங்களினூடாக தொடர்பு கொள்ள முடியும். SLT-MOBITEL மொபைல் மற்றும் இதர மொபைல் வலையமைப்பு சேவைகளை பயன்படுத்துவோர் 247 எனும் இலக்கத்தை அழைக்க முடியும். SLT-MOBITEL ஹோம் இணைப்புகளை வைத்திருப்போர் 1247 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியும்.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் தேசத்துக்கு முழுமையான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கை மருத்துவ சம்மேளனம் போன்ற பங்காளர்களுடன் இணைந்து செயலாற்றி, நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அவற்றின் பயனை தேசத்துக்கு வழங்க முன்வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .