Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 27 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி கொள்வனவு செய்யும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும், Fairfirst தனது ஒன்லைன் நிலையத்தை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
இதனூடாக வாடிக்கையாளர்கள் காப்புறுதி ஒன்றை கொள்வனவு செய்யும் போது, பின்பற்ற வேண்டிய பல்வேறு கட்டங்களைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தினூடாக வழங்கப்படும் சேவைகள், பாரம்பரிய காப்புறுதித் திட்டங்களைப் போலன்றி, வாடிக்கையாளர்கள் தமக்கு அவசியமான திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளக்கூடிய வசதியை வழங்குகிறது. தமது செலவிடும் நிலை மற்றும் தமது வாகனப்பகுதிக்கு அவசியமான காப்புறுதியை மாத்திரம் கொள்வனவு செய்யக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இந்தச் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்ததுடன், இந்த ஆரம்ப நிலையில், ஒன்லைன் நிலையத்தினூடாக மோட்டார் காப்புறுதி பிரதானமாக வழங்கப்படுகிறது. சுகாதார மற்றும் பயணக் காப்புறுதிகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கான காப்புறுதி போன்றவற்றை எதிர்வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இந்நிலையம் திட்டமிட்டுள்ளது.
நுகர்வோரின் தனிப்பட்ட தேவைகளை கவனத்தில் கொண்டு, ஒன்லைனில் காப்புறுதி கொள்வனவை மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்த முதலாவது பொதுக் காப்புறுதிச் சேவை வழங்குநராக Fairfirst இன்சூரன்ஸ் திகழ்கிறது. இந்நிலையத்திலிருந்து, அடிப்படை மூன்றாம் நபர் காப்புறுதி முதல் பரிபூரண இழப்பு காப்பீடு வரை உங்கள் தெரிவுக்கமைய காப்புறுதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரியான சசித் பம்பரதெனிய கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் ‘தொழில்நுட்பம்’ மற்றும் ‘காப்புறுதி’ ஆகியன இரு சொற்பதங்களாகத் தனித்து இயங்குகின்றன. ஏனைய தயாரிப்புகள் மற்றும் சேவைப் பிரிவுகளில் நுகர்வோரின் போக்குகள் மாற்றம் கண்டுள்ள நிலையில், காப்புறுதி சேவைகளை வழங்குவோர் தற்போதும் பாரம்பரிய கொள்வனவு முறைகளைகப் பின்பற்றி வருகின்றனர். Fairfirst ஒன்லைன் நிலையத்தினூடாக நாம் வாடிக்கையாளர்களின் ஒன்லைன் கொள்வனவு அசௌகரியங்களைக் குறைக்க எண்ணியுள்ளதுடன், ஒன்லைனில் தமது காப்புறுதிக் கொள்வனவுகளை மேற்கொள்ள அதிகளவு ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்த ஒன்லைன் நிலையத்தின் அறிமுகம் தொடர்பில், Fairfirst முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி சஞ்ஜீவ் ஜா கருத்துத் தெரிவிக்கையில், “மக்களுக்குப் பொருத்தமானது மற்றும் பொருத்தமற்றதைக் கண்டறிவதில் அதிகளவு கவனம் செலுத்துகிறோம். ஒன்லைன் நிலையத்தினூடாக, ஆக்கபூர்வமான டிஜிட்டல் தீர்வுகள் வழங்கப்படுவது மட்டுமின்றி, அவர்களுக்கு எம்முடன் பிரத்தியேகமான மற்றும் ஈடுபாட்டை பேணக்கூடிய அனுபவத்தைக் கொண்டிருக்க உதவியாக அமையும்” என்றார்.
24 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago