Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 18 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
Gestetner of Ceylon PLC இன் துணை நிறுவனமான Fintek Managed Solutions (Pvt) Ltd, இலங்கையில் Sharp போட்டோ பிரதி இயந்திர தீர்வுகளை விநியோகிப்பதற்கான அங்கிகாரம் பெற்ற விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளது. Fintek நிறுவனத்தின் வலிமை, Gestetner இன் சந்தை முன்னோடி எனும் நிலையை மேலும் மேம்படுத்துவதோடு, எதிர்வரும் காலங்களில் பல புதிய வியாபாரத் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது.
Sharp என்பது உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமமாக அமைந்துள்ளதுடன், தனது பிரத்தியேகமான இலத்திரனியல் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளினூடாகச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜப்பானிய வர்த்தக நிறுவனமாகும். அதன் தரம் மற்றும் திறன் போன்றவை 100 ஆண்டுகளுக்கு மேலான நம்பிக்கைக்கு பாத்திரப்பட்டுள்ளது.
புத்தாக்கம், பணப்பெறுமதி மற்றும் வடிவமைப்பு போன்றவற்றுடன் உயர் தொழில்நுட்பத்தை Sharp பயன்படுத்துகிறது. உலகளாவிய ரீதியில் காணப்படும் மக்களின் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், பிரத்தியேக SHARP முத்திரையிலமைந்த தயாரிப்புகள் காணப்படுகின்றன.
Fintek நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படும் Sharp வர்த்தக நாமத்திலமைந்த Color மற்றும் Black & White போட்டோ பிரதி இயந்திரங்கள், மல்டிமீடியா புரொஜெக்டர்கள், மின்னணு வெண் பலகைகள், பணம் கணக்கிடும் இயந்திரங்கள் மற்றும் மென்பொருள் தீர்வுகள் போன்றன அடங்கியுள்ளன.
தரமான பாதுகாப்பான மற்றும் சூழலுக்கு நட்பான ஆவணத் தீர்வுகள் போன்றன வியாபாரங்களுக்கும், நவீன தொழில் உலகுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த Sharp தயாரிப்புகள் தொடர்பில் Fintek அணியின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
துறையின் நிபுணரான அன்டன் சோனதிபதி Fintek இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயலாற்றி வருகிறார். உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பெருமளவு அனுபவம் பெற்ற சேனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில், “Sharp டிஜிட்டல் தயாரிப்புகள் பாவனையாளர்களுக்கு இலகுவாக இயக்கக்கூடிய, சிறந்த பாதுகாப்பு மற்றும் செயற்திறன் கொண்ட தயாரிப்புகள். உலக சந்தையில் இச்சிறந்த தயாரிப்புகள் நாம் வழங்கும் ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தினூடாக மேலும் உறுதி செய்யப்படுகின்றன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025