2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

FriMi உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்ப்பு

S.Sekar   / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் FriMi உடன் கைகோர்த்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் Clicklife ஒன்லைன் தீர்வை மக்கள் மத்தியில் இலகுவாகக் கொண்டு செல்லக்கூடிய வகையில் இந்தக் கைகோர்ப்பு அமைந்துள்ளது. சௌகரியம் மற்றும் அணுகல்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தி புதிய தலைமுறை காப்புறுதித் தீர்வுகளை வழங்கி, இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுச்சேர்ப்பதாக இந்த கைகோர்ப்பு அமைந்துள்ளது.

சில நிமிடங்களினுள் FriMi appஇனூடாக Clicklife Online தீர்வை கொள்வனவு செய்வதற்கான பங்காண்மையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. புரட்சிகரமான தீர்வாக அமைந்துள்ள Clicklife, 100% கடதாசி பாவனை அற்றதாகவும், காப்புறுதியைக் கொள்வனவு செய்வதற்கு இலகுவானதும், சாத்தியமானதுமான முறையாக அமைந்துள்ளது. நாளொன்றுக்கு ரூ. 23 க்கு ஆரம்பித்து, ரூ. 4 மில்லியன் வரையான பாதுகாப்பை வழங்குகின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் கைகோர்ப்பாக FriMi உடன் இணைந்துள்ளதனூடாக, இலங்கையில் ஆயுள் காப்புறுதியின் சென்றடைவை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். எமது வர்த்தக நாமப் பெறுமதிகளில் வாடிக்கையாளர்கள் மையப்படுத்திய செயற்பாடு என்பது எப்போதும் முன்னிலை பெறுவதுடன், இந்தத் திட்டத்தினூடாக, டிஜிட்டல் ஆற்றல்களினூடாக எம்மால் புதிய அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் தந்திரோபாய பாங்கசூரன்ஸ் பங்காண்மையை யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்கனவே கொண்டுள்ளதுடன், FriMi உடனான இந்த புதிய திட்டத்தினூடாக அந்த பங்காண்மைக்கு மேலும் வலிமை சேர்க்கப்படும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .