Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதி அங்கிகாரம் பெற்ற பிரத்தியேக விநியோகத்தரான Kiddies & Kiddies & Toys International (KTI நிறுவனம், அண்மையில் முன்னெடுத்திருந்த ‘Win Wheels w ith Hot Wheels என்ற ஊக்குவிப்புக்கான வெற்றியாளர்களின் விவரங்களை அறிவித்துள்ளது.
அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் அதிர்ஷடசாலி வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், மின்சாரத்தில் மற்றும் உதை முறை மூலம் இயங்குகின்ற ஸ்கூட்டர்கள், உருளும் பாதச் சக்கரங்கள் (roller blades) மற்றும் சறுக்கு பலகைகள் skate boards) அடங்கலாக வியப்பூட்டும் பரிசுகளை வென்றுள்ளனர்.
இலங்கையில் Hot Wheels ஆர்வலர்களுக்கு இனங்காணல் அங்கீகாரத்துடன், வெகுமதியளிப்பதற்கு KTI தற்போது முன்னெடுத்துவருகின்ற முயற்சிகளின் ஒரு அங்கமாக இது அமைந்துள்ளது.
‘இலங்கையில் Hot Wheels தொடர்பில் விசுவாசமும், தீவிர உணர்வும் கொண்ட ஆர்வலர்கள் பலர் உள்ளதுடன், சிறுவர் முதல் பெரியோர் வரை அவர்கள் விந்தையான சாகசங்களை அனுபவிக்க அவை இடமளிப்பதால் அவர்கள் அதனை தீவிரமாக நேசிக்கின்றனர்.
ஆகவே இந்த கார் வகைகள் மற்றும் அவற்றின் மூலமாக கிடைக்கப்பெறுகின்ற நேர அளவற்ற பொழுதுபோக்கு காரணமாக அவர்கள் தீவிரமாக இதனை விரும்புகின்றனர். அவர்கள் இந்த வர்த்தகநாமத்தின் மீது கொண்டுள்ள இத்தகைய அளவிலான மட்டற்ற நேசமே, இலங்கையில் Hot Wheels இந்த அளவிற்கு வளர்ச்சி காண்பதற்கு உதவியுள்ளது. வர்த்தக நாமத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள தீவிர உணர்விற்கு நாம் வழங்கும் ஒரு சிறிய வெகுமதியே இந்த ஊக்குவிப்பாகும்,’ என்று KTI நிறுவனத்தின் விளையாட்டுப் பொருட்களுக்கான மூலோபாய வர்த்தகப் பிரிவின் தலைமை அதிகாரியான டில்ஷா ருவான்பத்திரன அவர்கள் குறிப்பிட்டார்.
‘ஆரம்பத்திலிருந்தே நான் Hot Wheels இன் தீவிர ஆர்வலராக இருந்து வருகின்றேன். இது எனது மகிழ்ச்சியான பிள்ளைப்பருவத்தை நினைவூட்டுவதுடன்,Hot Wheels உற்பத்தி வகையை காணும் போது நான் அன்று பெற்றுக்கொண்ட அதே மகிழ்ச்சியான அனுபவத்தை மீளவும் உணர முடிகின்றது. எத்தனையோ தலைமுறைகளாக ஆர்வலர்களைக் கொண்டுள்ள ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில் KTI நிறுவனம் தனது அண்மைய ஊக்குவிப்பின் மூலமாக அந்த தீவிர உணர்வை கச்சிதமாக தொடர்புபடுத்தியுள்ளது,’ என்று மாபெரும் பரிசின் வெற்றியாளர்களுள் ஒருவரான சனுல் சிந்தா குறிப்பிட்டார்.
நீடித்து உழைக்கின்ற விளையாட்டு வாகனங்கள் மற்றும் படைப்பாக்கத்திறன் மிக்க விளையாட்டு உபகரணங்களுடன் ஈடிணையற்ற சாகச அனுவங்களை வழங்கிவருகின்ற Hot Wheels அதன் மூலமாக சிறுவர்களின் கற்பனைச்சக்தியை மேம்படுத்தி வருகின்றது. பல தசாப்தங்களாக இளையோரையும் மகிழ்வித்து வந்துள்ள இந்த கார் வகைகள், உலகெங்கிலும் தொடர்ந்தும் பல மில்லியன் கணக்கான மக்களை மகிழ்வித்து வருகின்றன.
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
19 Sep 2025