Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
Hutch “Dial Tunes” என்ற மற்றுமொரு சேவையை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘Dial Tunes’ மூலமாகHutch வாடிக்கையாளர்கள், அழைப்பொன்றை மேற்கொள்ளும் வேளையில் அந்த
அழைப்பிற்கு பதில் கிடைக்கும் வரை காத்திருக்கும் போது வழமையான அழைப்பு தொனியை செவிமடுப்பதற்குப் பதிலாக, தமக்கு பிடித்தமான பாடல்களை கேட்கும் வசதியை செயற்படுத்திக் கொள்ள முடியும். இந்த விசேட சேவையை இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனமாக Hutch திகழ்கின்றது.
“369” IVR மற்றும் USSD போன்ற பல்வேறு வழிமுறைகளினூடாக Dial Tune சேவைகளை மிகவும் சௌகரியமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இச்சேவைக்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.3 மற்றும் உரிய வரி அறிவீடு மட்டுமே.
Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா இது தொடர்பில் கூறுகையில், ‘மொபைல் புரோட்பான்ட் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ஒரு சேவை வழங்குநராக நாம் வளர்ச்சிகண்டு வருகின்ற நிலையில், மேம்பாடடைந்து வருகின்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொடர்ச்சியாக புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற Hutch நிறுவனம், நவீன சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றது.
அலைபேசி தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் கடந்த 100 ஆண்டுகளாக அழைப்பு காத்திருப்பு தொனி (dial ringing tone) என்ற அம்சத்தில் மேம்பாடுகள் எதுவும் நிகழாத நிலையில், இதற்கு முன்னோடியாகத் திகழ்வதையிட்டு Hutch மிகவும் பூரிப்படைந்துள்ளது.
43 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago