Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 23 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
1959ஆம் ஆண்டு Institute of Personnel Management (IPM) ஸ்ரீ லங்கா நிறுவப்பட்டது. இந்த நிபுணத்துவ அமைப்புக்கு அண்மையில் ‘Chartered’ அந்தஸ்து வழங்கப்பட்டு ‘Chartered Institute of Personnel Management Sri Lanka’ எனும் நிலைக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நாட்டில் காணப்படும் ‘Chartered’ அந்தஸ்தைப் பெற்ற ஒரே மனித வளங்கள் முகாமைத்துவ நிறுவனமாக திகழ்வதுடன், நாடாளுமன்றத்தின் சட்டத்தின் பிரகாரம் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனமொன்றின் ஊழியர்கள், கலாசார முகாமைத்துவ ஒழுக்கவிதி முறைகளுக்குச் சேவையாற்றுவது, நாட்டின் ஊழியர் முகாமைத்துவ எதிர்பார்ப்புகளுக்கு அவசியமான அறிவை பெற்றுக்கொடுப்பது, வினைத்திறன் வாய்ந்த வழிமுறைகளை அறிமுகம் செய்வது போன்ற நடவடிக்கைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துள்ள ஒரே அமைப்பாக Charted Institute of Personnel Management (CIPM) ஸ்ரீ லங்கா திகழ்கிறது.
இலங்கையில் காணப்படும் வர்த்தகங்களில் சிறிய, நடுத்தரளவு, பாரியளவு மனித மூலதனங்களை தேசிய மட்டத்தில் மேம்படுத்துவதற்கு அறிவார்ந்த நிபுணர்களின் உருவாக்குவதற்கு அவசியமான கல்விசார், நிபுணத்துவ நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதில் Chartered Institute of Personnel Management (CIPM) ஸ்ரீ லங்கா ஈடுபட்டுள்ளதுடன், அவற்றைச் சீராகப் பேணுவதிலும் கவனம் செலுத்துகிறது.
க.பொ.த உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்த பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுக் கொள்ள முடியாத மாணவர்களுக்கும் தமது எதிர்காலத்தை வெற்றிகரமான பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு, அவசியமான உயர் கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒதுக்கங்களையும் இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.
1976ஆம் ஆண்டின் 24ஆம் சட்டத்தின் பிரகாரம் நிறுவப்பட்ட ‘Chartered Institute of Personnel Management ஸ்ரீ லங்கா’, வரலாற்றில் Chartered அந்தஸ்தை பெற்றுக் கொண்டமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக அமைந்துள்ளது.
இந்தச் செயற்பாடுகள் அனைத்தும், CIPM ஸ்ரீ லங்காவின் நியமத்தை சர்வதேச ரீதியில் முன்னோடியான அமைப்பான பிரித்தானியாவின் Chartered Institute of Personnel and Development (CIPD) நிலைக்கு மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
மனித ஆற்றலை வெளிக் கொணரக்கூடிய புத்தாக்கமான செயற்பாடுகளை முன்னெடுப்பதை நோக்காக கொண்டு செயற்படும் CIPM, தற்காலப் பணியிட சூழலுக்குப் பொருந்தக்கூடிய வகையில், முதலீடுகளை மேற்கொண்டு, தற்காலப் பணியிட சூழலுக்குப் பொருத்தமான அறிவார்ந்த ஊழியர்களைத் தயார்ப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago