Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஆடைத்தொழிற்றுறையைச் சேர்ந்த நிறுவனங்களின் சம்மேளனமாக திகழும் இலங்கை ஆடை உற்பத்தி நிறுவனங்களின் இணை சம்மேளனம் (JAAF) தனது புதிய இணையத்தளம், இலச்சினையை அறிமுகம் செய்துள்ளது.
சம்மேளனத்தின் 15ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் இடம்பெற்ற போது இந்த அறிமுகத்தை மேற்கொண்டிருந்தது.
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 7% பங்களிப்பை கடந்த தசாப்த காலப்பகுதியில் ஆடை உற்பத்தித்துறை வழங்கியுள்ளதுடன், நாட்டின் பல ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு வளமூட்டி வரும் துறையாக அமைந்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இலச்சினை, சிங்கத்தின் முகத்தை கொண்டுள்ளதுடன், நாட்டின் பரந்த கலாசாரத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இலங்கையின் பன்முகத்தன்மையை குறிப்பிடுவதுடன், சிங்கத்தின் தோற்றத்தில் பல வர்ணங்கள் அடங்கியுள்ளன. தேசிய கொடியில் காணப்படும் வர்ணங்களை இந்த இலச்சினையிலும் காண முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .