Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூலை 19 , பி.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
Jinasena (Pvt) Limited, அண்மையில் இரு புத்தாக்கமான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இராஜகிரியவிலுள்ள Clearpoint Residencies மற்றும் மாலைதீவிலுள்ள Constance Halaveli ஆடம்பர ஹோட்டல் ஆகியவற்றில் நீர்ப்பாசன முறைமைகளை வடிவமைத்து, அவற்றை ஏற்பாடு செய்துள்ளது.
தியவன்ன ஏரியை நோக்கியுள்ள Clearpoint Residencies உலகிலேயே அதிக உயரமான குடியிருப்பு செங்குத்து பூந்தோட்டத்தைக் கொண்டுள்ளதுடன், 46 அடுக்குகளில் 171 ஆடம்பர அடுக்குமனைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குமனையிலும் அதன் வெளிப்புறத்தை முற்றாக உருமறைக்கும் வகையில் பூந்தோட்டம் வளர்க்கப்பட்டுள்ளதுடன், Jinasena இனால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சுய நீர்ப்பாசன வசதியுடனான நிலைபேற்றியல் முறைமையைக் கொண்டுள்ளது.
கட்டடத்தின் மேற்தளத்தில் பொருத்தப்பட்டுள்ள நீர்பாய்ச்சும் தொகுதியை உபயோகித்து, அனைத்து அடுக்குமனைகளுக்கும் நீர் பாய்ச்சப்படுவதுடன், சொட்டுநீர்ப்பாசன முறை மூலமாக, மரக்கன்றுகளுக்கும், பூச்செடிகளுக்கும் நீரை இறைப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றது.
செடிகளுக்கு நீரைப் பாய்ச்சுவதற்கான தினத்தில், குறித்த நேர காலத்துக்கான தன்னியக்க நேரக் கட்டுப்பாட்டு சாதனம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரங்களில் பாய்ச்சப்படுகின்ற தண்ணீரின் அளவைக் குறைத்து, அதன் மூலமாகத் தண்ணீரின் பாவனையைச் சேமிக்கும் வகையில் மழைக்காலத்துக்கான ‘விசேட உணரி சாதனம்’ ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.
கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழ்ப்பகுதிக்கு தண்ணீர் பாயும் போது, ஏற்படுகின்ற அமுக்கத்தின் அளவைக் கணிசமான அளவில் கட்டுப்படுத்தும் முகமாக, 46 தளங்களைக் கொண்ட கட்டடத்தில் ஒவ்வொரு 5 ஆவது தளத்திலும் அமுக்க கட்டுப்பாட்டு வால்வு (Pressure Regulating Valve - PRV) பொருத்தப்பட்டுள்ளமை முக்கியமான அம்சங்களுள் ஒன்றாகும்.
Constance Halaveli செயற்திட்டமானது Jinasena நிறுவனத்தால் வெளிநாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள முதலாவது செயற்திட்டமாக அமைந்துள்ளது. அதிசொகுசு ஜனாதிபதி மாளிகை மற்றும் ஹோட்டலின் குறிப்பிட்ட பொதுப் பிரதேசங்கள் அடங்கலாக 29 மாளிகைகளுக்கும் ஏற்கெனவே காணப்பட்ட நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளை உபயோகித்து, அந்த ஆடம்பர ஹோட்டலுக்கு நீர்ப்பாசன முறைமையொன்றை Jinasena வடிவமைத்து, ஏற்பாடு செய்துள்ளது.
ஹோட்டலில் தங்கியுள்ள விருந்தினர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இரவு நேரங்களில் தண்ணீரைப் பாய்ச்சுவதற்கு ஏதுவாக சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரைத் தொடர் குழாய், தெளிப்பான்கள், சொட்டு நீர்ப்பாசன முறைமைகளை உபயோகித்து பாய்ச்சும் வண்ணம் இத்தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு செயற்திட்டங்கள் தொடர்பில் Jinasena (Pvt) Limited நிறுவனத்தின் நீர்ப்பாசன முறைமைகளுக்கான பிரதிப் பொது முகாமையாளரான அஜித் டி சில்வா கருத்து வெளியிடுகையில், “இந்த இரு செயற்திட்டங்களுமே எமக்குப் பலத்த சவாலாக அமைந்ததுடன், எமது புத்தாக்கமான சிந்தனை, நீர்ப்பாசன முறைமைகளில் ஈடுஇணையற்ற அனுபவம் ஆகியவற்றின் மூலமாக, நாம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளோம். எண்ணற்ற கிடைத் தரையமைப்பு, பூந்தோட்டங்களுக்கான நீர்ப்பாசன முறைமைகளை வழங்கியிருப்பினும், பிரமாண்டமான, சிக்கலான Clearpoint இல் செங்குத்தான பூந்தோட்டத்துக்கான நீர்ப்பாசன முறைமையை நாம் முதன்முறையாக ஏற்பாடு செய்ய வேண்டிய ஒரு சவால் காணப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago