2025 மே 21, புதன்கிழமை

La Trobe பிஸ்னஸ் ஸ்கூல் வழங்கும் கற்கைகள்

Editorial   / 2018 ஜூன் 05 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளைப் பற்றி அறிவிக்கும் வகையில், La Trobe பிஸ்னஸ் கூலின் பீடாதிபதியும் தலைவருமான பேராசிரியர் ஜேன் ஹமில்டன் தலைமையிலான குழு, காத்மண்டு, இந்தியா மற்றும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.   

இலங்கையிலிருந்து அதிகளவான மாணவர்கள் La Trobe பிஸ்னஸ் ஸ்கூலின் கற்கைகளில் ஈடுபாட்டை காண்பிக்கும் வகையில், ஜனவரியில், பட்டப் பின்படிப்பு வியாபார கற்கைகளை அறிமுகம் செய்திருந்தது. 

நவம்பர் மாதத்தின் பட்டமுன் படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கைகளை அறிமுகம் செய்திருந்தமைக்கு மேலதிகமாக இந்தக் கற்கை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. நவம்பர் மாத மாணவர் சேர்ப்பு என்பது, பெப்ரவரி மற்றும் ஜூலை மாதக் கற்கைநெறிகளுக்கு மாணவர் சேர்ப்புக்கு மேலதிகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

La Trobe பிஸ்னஸ் ஸ்கூல், சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டப் பின்படிப்பு கற்கைகளுக்கு மூன்றாம் செமிஸ்டர் கற்கைகளை அறிமுகம் செய்திருந்தது. இவை தற்போது இலங்கை மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்றுக் காணப்படுகின்றன.

மேலும், துறையின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலான புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், தொழில் சந்தைக்கு பொருத்தமான வகையிலும் இவை அமைந்துள்ளன.

பேராசிரியர் ஜேன் ஹமில்டன் கருத்துத் தெரிவிக்கையில், “La Trobe பல்கலைக்கழகத்தால் எமது பிராந்தியத்தில் காணப்படும் பிரதான நாடுகளுடன் கைகோர்க்க காண்பிக்கும் உறுதியான ஈடுபாடு மற்றும் மாணவர்களுக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமை போன்றன இலங்கைக்கு La Trobe பிஸ்னஸ் ஸ்கூலை மீளக் கொண்டு வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தன.

எமது புதிய ஜனவரி மாணவர் சேர்ப்புடன், ஒரு வருடத்தில் மூன்று மாணவர் சேர்ப்புகளை வழங்குகிறது. அத்துடன், இலங்கையின் திறமை வாய்ந்த மாணவர்களுக்குத் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு புலமைப்பரிசில்களையும் வழங்குகிறது.

La Trobe பிஸ்னஸ் ஸ்கூலில் புத்தம் புதிய வசதிகளுடன் மாணவர்களுக்கு அதிகளவு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன” என்றார்.  

21ஆம் நூற்றாண்டின் வியாபாரச் சூழலுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை மாற்றியமைக்கும் வகையில் La Trobe பல்கலைக்கழகத்தின் MBA கற்கைகள் அமைந்துள்ளன.

எமது கற்கைகளை EPAS அங்கிகரித்துள்ளதுடன், உலகின் முதல் தர சர்வதேச கற்கைநெறியாக CEO சஞ்சிகையும் ஏற்றுக் கொண்டுள்ளது. நிறுவனமொன்றினுள் நிறுவனசார் பயிலல் திட்டமொன்றில் மாணவர்களுக்குப் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்தக் கற்கை அமைந்துள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X