Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (MBSL), mCash உடன் இணைந்து வாடிக்கை யாளர்களுக்கு சௌகரியமான கொடுப்பனவு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தப் பங்காண்மையின் நேரடி அனுகூலமாக, மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு தமது லீசிங் கொடுப்பனவுகளை, mCash ஊடாக இலகுவாக மேற்கொள்ள முடியும்.
இதற்காக, வாடிக்கையாளர்கள் #111# டயல் செய்து அல்லது mCash App பதிவிறக்கம் செய்து மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி ஐ தெரிவு செய்து, அதில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
அல்லது நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் mCash விற்பனையாளர் பகுதிகளை நாடி மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
37 வருட கால அனுபவத்தைக் கொண்ட மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில், 1991ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பதுடன், இலங்கை வங்கியின் துணை நிறுவனமாகும்.
தற்போது, மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, இலங்கையின் முன்னணி முதலீட்டு மற்றும் வாடிக்கையாளர் வங்கியியல் துறையில் முன்னோடியாக வெற்றிகரமாக இயங்கி வருவதுடன், வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு லீசிங், கூட்டாண்மை மற்றும் தனிநபர் கடன் மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழிற்துறைகளுக்கான கடன் வசதிகள், அடகுச் சேவை மற்றும் சொத்துகள் விற்பனை, கூட்டாண்மை ஆலோசனை மற்றும் மூலதனச் சந்தை, பங்கு முகவர் சேவை, சேமிப்பு, சிறுவர் சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்புகள் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது.
mCash என்பது, தேசிய மொபைல் சேவைகள் வழங்குநரான மொபிடெலின் மொபைல் பணப்பை சேவையாக அமைந்துள்ளது. இதற்கு இலங்கை மத்திய வங்கியின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 2013 நவம்பர் மாதம் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்பு சௌகரியம், உடனடித்தன்மை, பாதுகாப்பு போன்றன உறுதி செய்யப்பட்ட நிதி கொடுக்கல், வாங்கல்களை அலைபேசிகளினூடாக மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி அமைந்துள்ளது.
மொபிடெல் தனது வாடிக்கையாளர் சென்றடைவு, நாடளாவிய ரீதியில் பரந்த விநியோக வலையமைப்பு ஆகியவற்றினூடாக போட்டிகரமான அனுகூலங்களை நிதித்துறைக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில், மொபிடெல் இந்த நிதிச் சேவைகளை வழங்கும் பயணத்தை ஆரம்பித்திருந்தது. இதனூடாக ஒவ்வோர் இலங்கையருக்கும் டிஜிட்டல் நிதியியல் உள்ளடக்கத்தை பெற்றுக் கொடுப்பது இலக்காகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago