Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
Mahindra குழுமத்தின் ஒரு அங்கமான Mahindra & Mahindra Ltd மற்றும் முன்னிலை வகிக்கின்ற மோட்டார் வாகன மற்றும் கைத்தொழில் மசகு எண்ணெய் உற்பத்தி நிறுவனமான Lanka IOC ஆகியன இணைந்து, Mahindra Genuine Oil – Maximile ஐ மீளறிமுகம் செய்துள்ளன.
“Maximile” என்ற வர்த்தகநாமத்தின் கீழ் பிரத்தியேகமாக Mahindra மோட்டார் வாகன உற்பத்திகளுக்கான பல்வேறு வகைப்பட்ட Lanka IOC என்ஜின் மற்றும் கியர் ஓயில் உற்பத்திகளை Mahindra இதன் மூலமாக வழங்குகின்றது.
Mahindra & Mahindra Limited நிறுவனத்தின் பிரதித் தலைமை அதிகாரியான சஞ்சய் ஜாதவ் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “முன்னணி மசகு எண்ணெய் வர்த்தகநாமமான Lanka IOC உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளோம். விசேடமாக தயாரிக்கப்பட்ட முன்னணி தரம் கொண்ட அசல் என்ஜின் ஓயில் உற்பத்திகள் Mahindra வாகனங்களின் நீண்ட கால பாவனை மற்றும் இயங்குதிறனுக்கு மிகவும் உகந்தவை. Lanka IOC உடனான பங்குடமையின் கீழ் அவர்களின் வலுவான நன்மதிப்பு, உயர் தரம் கொண்ட உற்பத்திகள் மற்றும் விசாலமான விநியோக வலையமைப்பு மற்றும் Ideal Motors உடன் நாடளாவிய ரீதியில் நாம் கொண்டுள்ள வலையமைப்பு மூலமாக பயனடைவதை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .