2024 மே 03, வெள்ளிக்கிழமை

Microsoft Imagine Cup 2023 இறுதிப்போட்டிக்கு தெரிவானோர் அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு

Freelancer   / 2023 ஜூலை 10 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

Microsoft Imagine Cup 2023இன் உலக இறுதிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருநது தெரிவு செய்யப்பட்ட இரு அணிகளைச் சேர்ந்தவர்கள், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ ஜே. சங் உடன் சந்திப்பை மேற்கொண்டனர். Microsoft அலுவலகத்துக்கு தூதுவர் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த சந்திப்பு நடைபெற்றது. Sipsara மற்றும் The Green Tycoon ஆகிய அணிகள், Microsoft Imagine Cup 2023 போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிட தெரிவாகியிருந்தன. புவி, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைமுறை ஆகியன தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் காணப்படும் பெருமளவான பிரச்சனைகளுக்கு மாணவர்களால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீர்வு காண்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்படுகின்றது. அணியினருடன் சந்திப்பை மேற்கொண்டிருந்த போது, சமூகத்துக்காக அவர்களின் சிந்தனைப் பங்களிப்பால் எய்தக்கூடிய பயன் தொடர்பில் பாராட்டுதல்களையும் தெரிவித்திருந்தார்.

 

Microsoft தென் கிழக்கு ஆசியா புதிய சந்தைகள் (SEA NM) பொது முகாமையாளர் சூக் ஹுன் சீஹா மற்றும் Microsoft ஸ்ரீ லங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் ஹர்ஷ ரந்தெனி ஆகியோர் அமெரிக்கத் தூதுவர் சங் அவர்களை வரவேற்றிருந்தனர்.

தொழில்நுட்பசார் புத்தாக்கம் தொடர்பில் காணப்படும் எல்லைகளை மறுசீரமைத்து, ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, கல்வி மற்றும் புவி ஆகிய பிரிவுகளில் இலங்கையின் இரு அணிகளும் போட்டியிட்டிருந்தன. Sipsara அணியினால் மன நலிவு நோய் காணப்படும் சிறுவர்கள் மத்தியில் திறன்களை அளவிடல் மற்றும் கட்டியெழுப்பலுக்கு பயன்படக்கூடிய இணைய அடிப்படையிலான அப்ளிகேஷன் ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. The Green Tycoon அணியினால், காபன் வெளியீட்டை தணிப்பது, காபன் வரிகளைக் குறைப்பது மற்றும் பசுமையை ஊக்குவிக்கும் வகையில் காபன் வெளியீட்டை கண்காணிக்கும் மாற்று நிலைபேறான தெரிவான ‘CarboMeter’ என்பது வடிவமைக்கப்பட்டிருந்தது.

விஜயத்தின் போது, அணியினருக்கு தமது சிந்தனைகளை அமெரிக்கத் தூதுவர் சங் அவர்களுக்கும், சூக் ஹுன் சீஹா அவர்களுக்கும் வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்திருந்ததுடன், Microsoft Imagine Cup இல் பங்கேற்றதன் மூலம் தாம் பெற்றுக் கொள்ளும் அனுபவத்தையும் பகிர்ந்திருந்தனர். தம்முடன் பிரத்தியேகமான தொடர்பைக் கொண்டிருந்த பிரச்சனைகள் தொடர்பில் இந்த மாணவர்கள் கவனம் செலுத்தியிருந்ததுடன், Microsoft Imagine Cup பயணத்தினூடாக, AI இன் சக்தியினூடாக தம்மால் எய்தக்கூடிய விடயங்களை அடைய ஊக்குவிப்புகள் கிடைத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

தூதுவர் சங் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் இரு அணிகளையும் சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்களின் திறன்கள் மற்றும் ஆற்றல்களினூடாக நாட்டுக்கு குறிப்பிடத்தக்களவு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. மாற்றத்துக்கான வழிகோலியாக புத்தாக்கம் அமைந்திருப்பதுடன், நிலைபேறான மற்றும் சுபீட்சமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. Microsoft Imagine Cup போன்ற கட்டமைப்புகளினூடாக தொழில்நுட்ப சிறப்பை கட்டியெழுப்பும் Microsoft இன் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியவை. இலங்கையிலும் அதற்கு அப்பாலும் பிரகாசமான எதிர்காலத்தை இவை அடையாளப்படுத்துகின்றன.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .