S.Sekar / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் 2020 நிகழ்வில் “சிறந்த புதிய அறிமுக வர்த்தக நாமம்” எனும் பிரிவில் Moose Clothing கம்பனி தமது முதலாவது வெண்கல விருதை வெற்றியீட்டியுள்ளது.
அனைவராலும் விரும்பப்படும் ஆடைகளை உற்பத்தி செய்வதில் Moose Clothing நம்பிக்கை கொண்டுள்ளதுடன், சகலருக்கும் தமது பிரத்தியேகமான பண்புகளை பின்பற்றி கொண்டாடி மகிழ அனுமதிப்பதாக அமைந்துள்ளது. பரந்த வர்த்தக நாமமாக Moose Clothing தம்மை கட்டியெழுப்பியுள்ளதுடன், சிறந்த பொருத்தமான சௌகரியமான மற்றும் தரமான ஆடைகளை உற்பத்தி செய்கின்றது. தமது ஆடைகளின் ஒவ்வொரு அம்சங்களையும் செம்மைப்படுத்துவது என்பதில் வர்த்தக நாமம் அதிகளவு அக்கறை கொண்டுள்ளதுடன், தரமான ஆடை உற்பத்தியை உற்பத்தி செய்வதில் தனது முழு முயற்சியையும் ஈடுபடுத்துகின்றது.
இந்த சாதனை தொடர்பாக Moose Clothing கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹசிப் ஒமார் கருத்துத் தெரிவிக்கையில், “வர்த்தக நாமத்துக்கான எமது கடின உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் மீது காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த சிறந்த அங்கிகாரமாக இது அமைந்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் பிரத்தியேகமானவர் என்பதுடன், அந்த பிரத்தியேகத்தன்மையை ஈடுசெய்யும் வகையில் எமது ஆடை உற்பத்திகள் அமைந்திருக்க வேண்டும் என்பதில் Moose ஐச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதை கவனத்தில் கொண்டு நாம் சந்தையில் பிரவேசித்திருந்ததுடன், நாம் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்பதற்கு தெளிவான எடுத்துக் காட்டாக இந்த விருது அமைந்துள்ளது.” என்றார்.
2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த வர்த்தக நாமத்தின் பயணம் என்பது, பணி, நடனம் மற்றும் விளையாட்டு என சகல செயற்பாடுகளுக்கும் பொருத்தமான பரந்தளவு ஆடைத் தெரிவுகளை உற்பத்தி செய்து வழங்குவதாக அமைந்துள்ளது.
தேசிய மட்டத்தில் வர்த்தக நாமத்தின் சிறப்பை கொண்டாடும் வகையில் SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் அமைந்திருப்பதுடன், சிறந்த சந்தைப்படுத்துனர்களின் மிகச் சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. சிறந்த வர்த்தக நாமச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதாக SLIM அமைந்திருப்பதுடன், உள்நாட்டு வர்த்தக நாமங்களை சர்வதேச நியமத்துக்கு கொண்டு செல்வதில் பங்களிப்பு வழங்குவதுடன், அதனூடாக தேசத்தின் சந்தைப்படுத்தல் தோற்றப்பாட்டை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நடுவர் குழாமைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்து, ஒவ்வொரு பிரிவுக்குமான வெற்றியாளரை தெரிவு செய்வார்கள்.
உள்நாட்டு ஆடை உற்பத்தித் துறையில் 50 வருட கால நிபுணத்துவத்தின் பெறுபேறாக Moose Clothing கம்பனி தோற்றம் பெற்றதுடன், அணிபவரின் வாழ்க்கை முறைக்கமைய புத்தாக்கத்தினூடாக தரமான ஆடைகளை உற்பத்தி செய்வதில் வர்த்தக நாமம் தன்னை ஈடுபடுத்தியுள்ளது.
2 hours ago
7 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
27 Jan 2026