2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘Mr. World Sri Lanka 2018’ போட்டியாளர்களுக்கு பௌசுல் ஹமீட் பயிற்சி

Editorial   / 2018 ஜூலை 17 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘Siyatha Mr. World Sri Lanka 2018’ போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களுடன், நவநாகரிகத்தின் குருவான பௌசுல் ஹமீட் தனது நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இப்போட்டியின் மாபெரும் இறுதி நிகழ்வு, அண்மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.   

இதன்போது, வெற்றியாளராக மனோஜ் சுரங்க டீ சில்வா வெற்றிவாகை சூடியதுடன், இவர் பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் நடைபெறவிருக்கும் ‘Mr. World 2018’ போட்டி நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளார்.   

‘தசாப்தங்கள் கடந்த இவ்வாறான ஒரு நிகழ்வுடன் இணைந்து செயற்படுவதையிட்டு பெருமிதம் அடைகின்றேன். ஹமீடியாவின் எழுபது வருடகால பயணத்தின் ஊடாக, உலகப் புகழ்பெற்ற போட்டி நிகழ்வுகள் மற்றும் ஆடை அணிவிக்கும் துறையுடன் ஒன்றிணைந்து செயற்படுபவன் என்ற அடிப்படையில், இந்தப் பயிற்சியளித்தல் நிகழ்வில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாகத் தனிப்பட்ட ஆடை அணிவித்தல் சார்ந்த முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டதை உறுதி செய்ய முடிகின்றது” என்று, தையல் ஆடைசார் சர்வதேச அனுபவத்தை வழங்குகின்ற இலங்கைக்கு சொந்தமான வர்த்தகக் குறியீடாவும் புகழ்பெற்ற ஆண்கள் ஆடை விற்பனை நிலையமாகவும் திகழ்கின்ற ஹமீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் நவநாகரிகத் துறையின் ‘மெஸ்ட்ரோ’வுமான பௌசுல் ஹமீட் தெரிவித்தார்.   

ஒரு நாள் முழுவதும் இடம்பெற்ற இந்த பயிற்சியளித்தல் அமர்வில் கலந்து கொண்ட அனைத்து இளம் போட்டியாளர்களும் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.   

இளம் ஆண்களுடன் பணியாற்றிய ஹமீட், தனிப்பட்ட ஆடை அணிதல், நாகரிக வாழ்க்கைமுறை, பண்பாடுகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்தார். இறுதி வெற்றியாளராக வெற்றிவாகை சூடும் இலக்கோடு போட்டியிடும் 18 போட்டியாளர்களுக்கு இது அனுகூலமாக அமைந்தது.   

அதேநேரம், இப்போட்டியாளர்களுக்கு தனிநபர் விருத்தி, தொழில் மையப்படுத்தல் மற்றும் இலக்கை நோக்கிய திசைமுகப்படுத்தல் போன்றவை குறித்தும் அறிவூட்டப்பட்டது.   

FH அக்கடமி தலைமையில் இடம்பெற்ற அறிவுசார் மற்றும் பெறுமதியான இந்தப் பயிற்சியளித்தல் அமர்வு, அனைத்து போட்டியாளர்களுக்கும் தங்களது நம்பிக்கை மட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு களமாக அமைந்தது.   

அதுமட்டுமன்றி, பன்முகத் தன்மையைக் கொண்ட நவநாகரிக உலகுக்குள் நுழைவதற்கான ஆற்றலைப் போட்டியாளர்களுக்கு வழங்கியதுடன், தங்களது ஆடைகள், காலணிகளை உபயோகித்தல் மற்றும் சிறந்த நறுமண திரவத்தை தெரிவு செய்தல் போன்ற சிறிய சிறிய விடயங்களில் கூடிய கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் அவர்களுக்கு அறிவூட்டப்பட்டது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .