2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

Multilac 3 in 1 Waterproofing பெயின்ட்டுக்கு CIOB பசுமை விருது

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

Macksons Paint Lanka (Pvt) Limited நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Multilac 3 in 1 Waterproofing பெயின்ட்டுக்கு, Ceylon Institute of Builders (CIOB) இன் தயாரிப்புகள் மற்றும் கட்டமைப்புகளுக்கான பசுமை விருதில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த பாராட்டு, இலங்கை கட்டுமான துறையில் நிலைபேற்றியல் மற்றும் புத்தாக்கத்தின் மீது Multilac காண்பிக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

CIOB பசுமை விருதானது, நிலைபேண்தகு நடைமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் பொருளாதார நெகிழ்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய தயாரிப்புகள் மற்றும் கட்டமைப்புகளை அங்கீகரிக்கிறது. Multilac 3 in 1 Waterproofing பெயின்ட் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களில் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பின் காரணமாக விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில் தனித்துவமாகத் திகழ்ந்துள்ளது.

இந்த பெயின்ட் நிலைபேண்தகு கட்டுமானத்தின் தரத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கும் சிறப்பம்சங்களின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. மிகச்சிறந்த நீர் எதிர்ப்பு மற்றும் தடுப்பாற்றல் தன்மைப் பண்புகளுடன், இது கூரைகள், சுவர்கள் மற்றும் குளியலறைகள் உள்ளிட்ட மேற்பரப்புகளை நீர் மூலமாக ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன், உட்புற வெப்பநிலையை 5 பாகை செல்சியஸ் வரை குறைத்து, எரிசக்தியைச் சேமிக்கும் திறன் ஆகியன இதனை உண்மையிலேயே தனித்துவத்துடன் திகழச் செய்கின்றன.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் Multilac இன் அர்ப்பணிப்பு அதன் குறைந்த ஆவியாகும் கரிம சேர்மத்தின் (Volatile Organic Compound -VOC) உள்ளடக்கத்தின் மூலம் தெளிவாக புலப்படுவதுடன், இது சுற்றுச்சூழல்நேயம் கொண்டதாகவும் உட்புற சூழல்களுக்கு பாதுகாப்பாகவும் உள்ளது. IPEN USA ஆல் Lead Safe என சான்றளிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் Green, ISO 9001, ISO 14001, மற்றும் SLS சான்று அங்கீகாரங்களையும் கொண்டுள்ளதுடன், தீந்தை மிக உயர்ந்த நிலைபேற்றியல் தரங்களை உள்ளடக்கியது.

சிட்ரஸ் வஸ்கடுவ பீச் ரிசோர்ட், பார்க் லேன் ரெசிடென்சிஸ் ஹோமாகம மற்றும் நியூ கார்கில்ஸ் ஃபூட் சிட்டி கிளைகள் போன்ற திட்டங்களில் அதன் பங்களிப்பானது இத்தயாரிப்பின் தலைமைத்துவ ஸ்தானத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. வெளிப்புறச் சுவர்கள் முதல் இடைவெளியற்ற சுவர்கள் மற்றும் எரிசக்தி உணர்திறன் கொண்ட பகுதிகள் வரை இந்த பண்புகளில் அதன் பயன்பாடு அதன் பல்துறை திறன் மற்றும் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.

Multilac இன் பங்களிப்புகள் சுற்றுச்சூழலுக்கான நன்மைகளுக்கும் அப்பாற்பட்டவை. பராமரிப்புத் தேவைகளைக் குறைப்பதன் மூலமும், எரிசக்தியைப் பாதுகாப்பதன் மூலமும், ஆதன உரிமையாளர்களுக்கும், கட்டுமானத் தொழில் துறைக்கும் பொருளாதார நன்மைகளை வழங்குகிறது. தொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக மேம்பாட்டில் இத்தீந்தையின் நேர்மறையான தாக்கம் நிலைபேற்றியலில் அதன் தலைமைத்துவ ஸ்தானத்திற்கு மதிப்புமிக்க சமூக பரிமாணத்தை சேர்ப்பிக்கிறது.

“CIOB பசுமை விருது தங்க அங்கீகாரத்தைப் பெறுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். இது கட்டுமானத் துறையை நிலைபேற்றியலை நோக்கி திசைமாற்றுவதற்கான எமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது,' என்று Macksons Paint Lanka (Pvt) Limited இன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். 'இந்த விருது எமது அணியின் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கங்களுக்கு ஒரு சான்றாகும். எமது தயாரிப்புகள் மூலம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் எமது முயற்சிகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்,' என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

CIOB பசுமை விருது, Multilac 3 in 1 Waterproofing பெயின்டை நிலைபேண்தகு கட்டுமான நடைமுறைகளில் ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியுள்ளதுடன், இது இலங்கையின் கட்டுமானத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல அதன் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. நிலைபேற்றியலில் ஒரு முன்னோடியாக, Multilac ஆனது சூழல்நேய, புத்தாக்கமான மற்றும் தாக்கம் மிக்க தீர்வுகளுக்கு முன்னுதாரணமாக அமைகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X