2025 மே 20, செவ்வாய்க்கிழமை

Nokia 7 Plus திறன்பேசிக்கு விருது

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்லாந்தின் திறன்பேசி நிறுவனமான HMD Global அண்மையில் Expert Imaging and Sound Association (EISA) ஒன்றியத்தின் 2018-2019 ஆண்டுக்கான ‘பாவனையாளர்திறன்பேசி’ விருதைவென்றுள்ளது.

EISA ஒன்றியமானது 25 நாடுகளில்மக்களின் நன்மதிப்பைப்பெற்ற 53 இலத்திரனியல் சஞ்சிகைகளை கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

அதிகமாக பேசப்படும் விருது பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் இந்த விருதுக்கு நடுவர் குழாத்தினால், கடுமையான போட்டிக்குமத்தியில் HMD Global நிறுவனத்தின் Nokia 7 Plus திறன்பேசி, அதற்கே உரித்தான கவர்ச்சிகரமான வடிவமைப்பு, சக்திமிக்க செயற்றிறன், கவர்ந்திழுக்கும்படத்தொகுப்பு ஆற்றல் ஆகிய சிறப்பம்சங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  

EISA ஒன்றியம் இது பற்றி குறிப்பிடுகையில், “Android One மென்பொருள்தளத்தில் அனைத்துகூறுகளும்சரியான இணக்கத்துடன் செயற்படுவதை உறுதிசெய்யும் வகையில் HMD Global நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள திறன்பேசி அதன் நம்பகத்தன்மை நிமித்தம் பாவனையாளர்களால் தன் நண்பர்களுக்கு சிபாரிசு செய்யக்கூடிய திறன்பேசியாக விளங்குகின்றது” என்று குறிப்பிட்டது.  

“இந்த வருடத்துக்கான EISA பாவனையாளர் திறன்பேசி விருதை வென்றதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். இந்த கௌரவமிக்க விருதானது, Nokia 7 Plus திறன்பேசிக்கு மட்டுமல்லாது HMD Global நிறுவனத்தின் ஏனைய அனைத்து அலைபேசிகளுக்கும்  ஒரு சிறந்த அங்கிகாரமாக விளங்குகின்றது” என்று HMD Global நிறுவனத்தின் இலங்கைக்கான சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரிகயான் விஜயதிலக தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X