Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2021 மார்ச் 16 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணமில்லா கொடுப்பனவு தீர்வுகள் வழங்குநரான PAYable (Pvt) Ltd., இதுவரையில் தனது கட்டமைப்பினூடாக 15 பில்லியன் ரூபாய் பெறுமதியான கொடுக்கல் வாங்கல்களை கையாண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த சாதனை தொடர்பில் யொஹான் விஜேசிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “2016 ஆம் ஆண்டில் பணமில்லாத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட ஆரம்பித்த PAYable, துறையில் புரட்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், முன்னர் வங்கிகளிடமிருந்து பணமில்லாக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் வசதிகளையும் தகைமைகளையும் கொண்டிராத நுண் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை விற்பனை நிலையங்களுக்கு வலுவூட்டியுள்ளது. இந்த விற்பனை நிலையங்களுக்கு வலுவூட்டுவதனூடாக, அவை இயங்கும் முறையை எம்மால் மாற்றி, வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு வழியேற்படுத்த முடிந்திருந்தது.” என்றார்.
PAYable தீர்வு என்பது அதிகளவு துரிதமானதாகவும், அளவிடக்கூடியதாகவும் காணப்படுவதுடன், உயர் சர்வதேச கொடுப்பனவு பாதுகாப்பு நியமங்களின் பிரகாரம் அமைந்துள்ளது. பணப்பாவனையில்லாத இலங்கையில் சாத்தியக்கூறை ஏற்படுத்தியுள்ளதாக நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.
“எமது சர்வதேச பங்காளர்களின் உதவியுடன் எமது வங்கியியல் பங்காளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வலிமையை ஏற்படுத்துவதற்கான முன்னணி தெரிவுகளை அறிமுகம் செய்யும் வகையில் நாம் செயலாற்றுகின்றோம். இந்த புத்தாக்கங்களினூடாக அட்டையுடனான மற்றும் அட்டை அற்ற தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த புத்தாக்கங்கள் உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், இதில் புதிய PAYable PRO மற்றும் PAYable MINI ஆகியன அடங்கியிருக்கும் என்பதுடன், எமது அன்ட்ரொயிட் கொடுப்பனவு ஏற்றுக் கொள்ளல் பகுதிகள், எளிமையான Keypad MPOS ஆகியன அன்ட்ரொயிட் மற்றும் iOS சாதனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளன. மேலும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட PAYable ஒன்லைன் ஊடாக விற்பனையாளர்களுக்கு உறுதியான புதிய சேவைகளான ஒன்லைன் விற்பனை நிலைய உருவாக்கம் மற்றும் முறையான கட்டணப்பட்டியல் தயாரிப்பு முறையின் அடிப்படையிலான விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சமூக வலைத்தளங்களை ஒன்றிணைப்பது போன்றவற்றை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.”
இலங்கையின் முன்னணி வங்கிகளுடனான பங்காண்மையுடன் PAYable செயலாற்றுவதுடன், இலங்கையில் பணமில்லாத கொடுப்பனவு கட்டமைப்பின் வளர்ச்சியில் பாரிய செயற்படுத்துநராக அமைந்துள்ளது. ஒவ்வொரு 1000 இலங்கையர்களுக்கும் 2.0 முதல் 3.8 வரையான பணமில்லாத கொடுப்பனவுகள் ஏற்றுக் கொள்ளும் நிலையங்களை பெருமளவில் அதிகரித்துக் கொள்வதற்கு உதவியாக அமைந்துள்ளது.
11 minute ago
21 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
48 minute ago
1 hours ago