Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
Mastercard, அண்மையில் மூலோபாய பங்காண்மை ஒன்றை PayMasterஉடன் ஏற்படுத்தியிருந்தது. இதனூடாக, இலங்கையை பணமற்ற சமூகத்துக்கு வழிநடத்தும் ஒன்லைன் கொடுப்பனவு கட்டமைப்பொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு இரு நிறுவனங்களும் உடன்பட்டிருந்தன.
இந்த ஒன்றிணைவினூடாக ஒப்பற்ற புத்தாக்கமான தொழில்நுட்பங்களினூடாக நுகர்வோருக்கு மேம்படுத்தப்பட்ட சௌகரியத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த இரு நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
இந்த ஆண்டின் முற்பகுதியில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த PayMaster, இலங்கையர்கள் தமது மொபைல் ரீலோட்கள், கட்டணப்பட்டியல்களுக்கான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் முறையில் புரட்சியை ஏற்படுத்த எதிர்பார்த்திருந்தது. இந்த செயன்முறையை தமது ஸ்மார்ட்ஃபோன் ஊடாக மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருந்தது.
இதுவரை சென்றடையாத சந்தைப்பகுதியை PayMaster அணுகுவதற்கான நோக்கம், 27+ மில்லியன் மொபைல் இணைப்புகள், 1.5 மில்லியன் கடன் அட்டை, 21 மில்லியன் டெபிட் அட்டை பாவனையாளர்களினூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கு பின்புலத்தில் சிங்கப்பூர் நிறுவனமான FirstPay Pte Ltd செயலாற்றுகின்றது. வாடிக்கையாளரை இலக்காகக் கொண்ட வடிவமைப்பு, உயர் மட்ட பாதுகாப்பு, புத்தாக்கமான உள்ளம்சங்களான gamification முறைகளினூடாக பாவனையாளர்களுக்கு அனுகூலமளிக்கும் PayMaster, அறிமுகத்தை தொடர்ந்து பெருமளவான பாவனையாளர்களை கவர்ந்துள்ளது.
PayMasterஇன் எளிமையான, பாதுகாப்பான, சௌகரியமான கட்டமைப்பு, MasterCardஇன் MPGS கட்டமைப்பினூடாக உருவாக்கப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கான PCIDSS நியமங்களை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளதுடன், tokenization தொழில்நுட்பத்தினூடாக ஒப்பற்ற பாவனையாளர் அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த புதிய ஒன்றிணைவினூடாக, PayMaster இனால் தற்போது Mastercard தொழில்நுட்ப சொத்துகளான Mastercard Send போன்றவற்றை பயன்படுத்தி, நபர்களுக்கிடையிலான பண அனுப்புகைகளை மேற்கொள்ள முடியும், இது PayMaster அப்ளிகேஷனில் உள்வாங்கப்படும்.
மேலும் பாவனையாளர்களுக்கு மேலும் அனுகூலத்தை சேர்க்கும் வகையில் மொத்த அனுப்புகைகள் மற்றும் வியாபாரத்திலிருந்து நபருக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago