J.A. George / 2020 நவம்பர் 13 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு பாலுற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் Pelwatte Dairy Industries , தனது பாலுற்பத்திப் பொருட்களின் ஊடாக ஊட்டச்சத்தினை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், பாற்பண்ணையாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அளிக்கும் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஆதரவின் மூலமாக அவர்கள், பொருளாதாரம் மற்றும் முழு நாட்டினையும் வலுவூட்டுகின்றமை தொடர்பிலும் நன்கறியப்பட்டது.
Pelwatte, இப்போது நிலைபேறான விவசாயம், உணவு உற்பத்திகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதுடன், மண் சேதம் முதல் சிறுநீரக நோய்கள் வரையான இரசாயன அடிப்படையிலான பசளைகளால் ஏற்படும் மோசமான விளைவுகளில் இருந்து மீண்டு வருவதில் நம்பிகையுடன் உள்ளது.
நிலைபேறான வளர்ச்சி மற்றும் வலுவூட்டலில் ஈடுபடும் நம்பிக்கையுடன், Pelwatte Dairy இப்போது அதன் புதிய சேதனப் பசளை (கூட்டெரு) வரிசையை இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Pelwatte கூட்டெரு, தொழில்துறை மற்றும் திணைக்கள நியமங்களுக்கு இணைவாக தயாரிக்கப்படுவதுடன், அதன் தரத்திற்காக சான்றளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தயாரிப்பு மூலம், உணவு உற்பத்தியில் இரசாயன உரங்களின் பயன்பாடு மற்றும் அதன் விளைவுகளைக் குறைக்க நிறுவனம் முயல்வதுடன், நிலைபேறான கழிவு முகாமைத்துவத்தின் உத்வேகத்தையும் உருவாக்குகின்றது. இந்த கூட்டெருவை பல்வேறு அளவிலான பை வகைகளிலிருந்து தெரிவு செய்து கொள்ள முடியும்.
Pelwatte Dairy Industries முதன் முதலில் 2018 அக்டோபர் மாதம் வளுகொல்லவில் உள்ள தனது பால் பண்ணையில், ஜனாதிபதி செயலகத்தின் முயற்சியான ‘நிலைபேறான உணவு அபிவிருத்தி திட்டத்தின்’ உதவி மற்றும் ஆலோசனையுடன் இந்த திட்டத்தை ஆரம்பித்தது. வளுகொல்ல பண்ணையானது கால்நடை வளர்ப்பு,
பாற்பண்ணையாளர் பயிற்சித் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது சேதன கூட்டெரு தயாரிப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேதன கூட்டெருவானது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளதுடன், மண்ணுக்கான செழுமையாக்கியாகவும், பசளையாகவும் இருப்பதுடன், அவசியமான மட்கு அல்லது அமிலங்களை வழங்குவது முதல் மண்ணுக்கு இயற்கையான பூச்சிக்கொல்லியாக இருப்பது வரை பல வழிகளில் நிலத்துக்கும், உற்பத்திகளுக்கும் நன்மையளிக்கின்றது.
இந்த புதிய தயாரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த, Pelwatte Dairy இன் பண்ணை முகாமையாளர் சமில ராஜபக்ஸ, " நாம் பரிந்துரைக்கப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்துவதுடன், தயாரிப்பு செயன்முறையில் அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்கின்றோம். கால்நடை கழிவுகள், வளர்ப்புப் பறவைகளின் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட தேயிலை இலைகள், தாவர கழிவுகள், கார்பனேற்றப்பட்ட நெல் உமி மற்றும் எப்பாவளை பாறை பொஸ்பேட் (ERP) ஆகியவற்றை உற்பத்திக்கு பயன்படுத்துகிறோம். இது செயன்முறைக்கு தாவர கழிவினை மாத்திரம் உபயோகிக்கும் ஏனைய பல சேதன பசளைகளிலிருந்து வேறுபட்டது," என்றார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்; "Pelwatte Dairy, உயர் தரமான கூட்டெருவை தயாரிப்பதற்கான எங்கள் குறிக்கோள் நிறைவேற்றப்படுவதை தொடர்ந்து உறுதி செய்ய ஆர்வமாக உள்ளதுடன், செயற்திறனான, நிலைபேறான கழிவு முகாமைத்துவத்தின் தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும், அதன் தரங்களை மீண்டும் உறுதிப்படுத்தி, Pelwatte கூட்டெருவானது விவசாயத் திணைக்களத்தின் கீழ் சேதனப் பசளைகளுக்கான சிறப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது," எனக் குறிப்பிட்டார்.
இலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக வறண்ட வலயத்தைச் சேர்ந்தோர், சிறுநீரக நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட காலப்பகுதியில், இந்த நிலைக்கு நீண்ட காலம் இரசாயன பசளைகளை விரிவாக பயன்படுத்துவது நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டியமைக்கு இணங்க, விவசாயத்தில் சேதன பசளைகளை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கூட்டெரு தயாரிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இரசாயன பசளைகளைப் போலல்லாமல், சேதன பசளையானது மண்ணை வளமூட்டி, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதுடன், பொது நல்வாழ்வுக்கு உதவுவதால் இலங்கை அரசு சேதனப் பசளைகளின் பயன்பாட்டை பாரிய அளவில் ஊக்குவிக்கத் தொடங்கியது. மேற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சேதன பசளைகளுக்கான தேவையானது அதிகரித்து வருவதுடன், காய்கறி பயிர்ச்செய்கை மற்றும் தோட்டக்கலைக்கு இது தேவைப்படுகிறது. மேலும், இது தோட்டம் செய்தல், நில வடிவமைப்பு மற்றும் நகர்புற விவசாயம் போன்ற பிற நோக்கங்களுக்கும் பயனளிக்கின்றது.
Pelwatte சேதனப் பசளை விரைவில் நாடு முழுவதுமுள்ள விவசாய விற்பனையகங்கள் மற்றும் நாற்றுமேடைகளில் கிடைக்கவுள்ளதுடன், தற்போது மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து Pelwatte Dairy விற்பனை நிலையகங்களிலும் 40 கிலோ கிராம், 20 கிலோ கிராம், 10 கிலோ கிராம் மற்றும் 5 கிலோ கிராம் பைகளில் முறையே ரூ. 800/ -, ரூ. 500/-, ரூ. 250/ - மற்றும் ரூ. 150 / - ஆகிய விலைகளில் கிடைக்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் சமில 0712991603.
2 minute ago
10 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
15 minute ago
1 hours ago