S.Sekar / 2021 மார்ச் 08 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருகுணு ஹொஸ்பிட்டல், 100,000 சதுர அடி விஸ்தீரணத்துடன் Ruhunu 2.0 (Newer l Better l Stronger) என்ற கருப்பொருளின் கீழ் ஒன்பது மாடிகளைக் கொண்ட அதிநவீன வசதிகளுடனான கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக மற்றுமொரு முதலீட்டை அண்மையில் மேற்கொண்டுள்ளது.

வைத்தியரின் ஆலோசனைச் சேவைகளுக்கு 50 இற்கும் மேற்பட்ட அறைகள், வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு படுக்கைகளுடனான 50 இற்கும் மேற்பட்ட அறைகள், வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், மாதிரி சேகரிப்பு அறை (இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி சேகரிப்பு), கதிரியக்கச் சிசிக்சைப் பிரிவு, இரு சத்திரசிகிச்சை அறைகள், இரு அதிசொகுசு சிகிச்சை விடுதிகள் (Kings Court மற்றும் Presidential Suite) மற்றும் இந்த மாகாணத்தில் முதற்தடவையாக அமையும் ருகுணு அனுமதி மற்றும் தகவல் மையம் ஆகிய வசதிகளை இக்கட்டடம் கொண்டுள்ளது. நோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் நிறைவடைந்து வெளியேறும் வரையில் மிகுந்த சேவை அனுபவத்துடன், துல்லியமான தகவல் விவரங்களை வைத்தியர்களுக்கும், நோயாளர்களுக்கும் வழங்கும் வகையில் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட அணியும் சேவையில் உள்ளது. முதற்கட்டமாக ஐந்து தளங்கள் சேவைகளுக்காக திறந்து வைக்கப்படவுள்ளன.
அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கும் வகையில் 150 இற்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் இங்கு வருகை தந்து வைத்திய ஆலோசனைகளை வழங்கவுள்ளதுடன், தனியார் மற்றும் அரச துறையிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள அனுபவம் வாய்ந்த மற்றும் தகமை பெற்ற தாதியர் அணியும் Ruhunu 2.0 இல் உலகத்தரம் வாய்ந்த நோயாளர் சிகிச்சை மற்றும் கவனிப்பை வழங்கும்.
Ruhunu Hospital Pvt Ltd இன் இணைத் தலைமை நிர்வாக அதிகாரியான ரவீன் விக்கிரமசிங்க கருத்து வெளியிடுகையில், 'நோயாளர்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்து நாம் ஆரம்பித்துள்ள ஒரு செயற்திட்டமே Ruhunu 2.0. சிறந்த காற்றோட்டத்திற்கு முன்னுரிமையளித்து, நோயாளர்களின் நடமாட்டத்திற்கான தனித்துவமான வடிவமைப்புக்கள் மற்றும் தாராள இட வசதிகள் நோயாளரின் அனுபவத்தை மிகவும் மேம்படுத்தியுள்ளன. அதன் விபரமான வடிவமைப்பு மிகவும் நேர்த்தியானது. 'பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட வாரத்தில்' இலங்கையில் இந்த வகையிலான ஒரு கட்டடத்தைக் கண்டு அவர்கள் வியப்படைந்தனர். நாம் ஹோட்டல் ஒன்றைத் திறந்துள்ளோமா அல்லது வைத்தியசாலை ஒன்றைத் திறந்துள்ளோமா என்றுகூட சிலர் என்னிடம் கேட்டனர். நோயாளரை மையமாகக் கொண்ட வடிவமைப்பு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் குறிப்பிடத்தக்க அளவில் சாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளதாக நாம் மிகவும் நம்புகின்றேன்,' என்று குறிப்பிட்டார்.
'1100 சதுர அடிக்கும் மேலான விஸ்தீரணம் கொண்ட இரு அதிசொகுசு சிகிச்சை விடுதிகள் வெகு விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளன. ருகுணு ஹொஸ்பிட்டல்ஸில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற போது மிகவும் சௌகரியத்தை விரும்புகின்ற உயர் அந்தஸ்து கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த இரு அறைகளும் சேவைகளை வழங்கும். மேல் மாகாணத்திலிருந்து சிசிக்சைகளுக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு உதவுவதற்காக வர்த்தக அலுவலகம் ஒன்றும் கொழும்பில் திறந்து வைக்கப்படவுள்ளது,' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
5 minute ago
8 minute ago
18 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
18 minute ago
20 minute ago