2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

SHANGRI-LA’S RESORT & SPAக்கு புதிய பொது முகாமையாளர்

Gavitha   / 2016 டிசெம்பர் 04 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள Shangri-La’s Resort & Spa ஹொட்டலின் புதிய பொது முகாமையாளராக இயன் மெக்கார்மக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆடம்பர விருந்தோம்பல் துறையில் 38 ஆண்டுகள் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ள இயன்னின் துறை சார் நிபுணத்துவமும் ஆழமான அறிவும், இலங்கையின் புத்தம்புதிய ஆடம்பர ஹொட்டலின் தொழிற்பாடுகளுக்கு, விலைமதிப்பற்ற ஒரு சொத்தாக அமையும்.  

ஆசியாவில் மிக நீண்ட காலம் பணியாற்றியுள்ள அவர், உலகில் முன்னிலை வகிக்கும் ஹொட்டல்கள் மற்றும் InterContinental ஹொட்டல்கள் குழுமம் போன்ற சர்வதேச விருந்தோம்பல் துறை நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். ஆசியாவில் விருந்தோம்பல் துறையின் தனித்துவம் தொடர்பான ஆழமான புரிந்துணர்வுடன் மெக்கார்மக், இப்புதிய ஹொட்டலுடன் இணைந்துள்ளார்.

இதற்கு முன்னர் அவர் வியட்னாமின் டனாங் நகரிலுள் Naman Retreat ஹொட்டலில் ஆலோசக பொது முகாமையாளராகக் கடமையாற்றியிருந்தார். அதற்கு முன்னர் வியட்னாம் டனாங் நகரிலுள்ள InterContinental ஹொட்டலில் பொது முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், 2014 மற்றும் 2015 ஆண்டுக்கான “உலகின் முன்னணி ஆடம்பர ஹொட்டல்” என்ற விருது அடங்கலாகப் பல்வேறு இனங்காணல் அங்கிகாரங்களையும், விருதுகளையும் அந்த ஹொட்டல் வெல்வதற்கு மிகச் சிறந்தப் பங்களிப்பை வழங்கியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X