Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜனவரி 08 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலங்கை இளைஞர்களின் திறமைகளை கட்டியெழுப்பும் நோக்குடன், ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட்டின் Swiss Hotel Management Academy Pvt. Ltd. (SHMA), தனது இரண்டாவது நிலைபேறான வளர்ச்சிக்கான திறன் நிகழ்ச்சி பயிலல் நிலையத்தை கண்டி தேசிய இளைஞர் அமைப்பு நிலையத்தில் திறந்துள்ளது.
நவம்பர் மாதம் மாத்தளையில் முதலாவது நிலையத்தை திறந்திருந்ததைத் தொடர்ந்து, SSG நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பெருமளவான விண்ணப்பங்கள் நாட்டின் கண்டிப் பிராந்தியத்திலிருந்து கிடைத்திருந்தமையினால் கண்டியை அபிவிருத்தி மற்றும் கூட்டாண்மைக்கான சுவிஸ் முகவர் அமைப்பு, பவருடன் தனியார் மற்றும் பொதுத் துறை பங்காண்மையை ஏற்படுத்தி தெரிவு செய்திருந்தது.
70 க்கும் அதிகமான மாணவர்கள் கண்டி பயிலல் நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்துள்ளதுடன், இரத்தினபுரி, மொனராகலை, குருநாகல், நீர்கொழும்பு போன்ற நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக அமைந்துள்ளனர். இவர்கள் தற்போது கண்டி தேசிய இளைஞர் அமைப்பை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரண்டாவது ஆட்சேர்ப்பை மேற்கொள்வதற்கு SHMA திட்டமிட்டுள்ளது.
கண்டியில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டம் புகழ்பெற்ற ஹோட்டல்துறை நிபுணரான சாம் ராஜமந்திரினியினால் முன்னெடுக்கப்படுகின்றது. இவர் மாணவர்களுக்கு தொழில்புரியும் திறன்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு பயிலல் நுட்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றார். இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பல ஹோட்டல்கள் நிகழ்ச்சிக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கவும் முன்வந்துள்ளன. அதற்கமைய சில மாணவர்கள் ஏற்கனவே நேர்முகத்தேர்வுகளுக்கு முகங்கொடுத்து, தெரிவு சுற்றிலும் தோற்றியிருந்தனர்.
ஹோட்டல் கிரான்ட் கண்டியனில் அனுபவ பயிலல் பயிற்சிப் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், இதன் போது ஹோட்டல் ஊழியர்கள் தமது ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டல்களை மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலத்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் வழங்கியிருந்தனர். இந்த பெறுமதி சேர்க்கப்பட்ட நேரடி ஹோட்டல் அனுபவங்களினூடாக தொழிற்பயிற்சியில் பிரவேசிக்கும் முன்னர் மாணவர்களுக்கு தொழிற்துறைசார் வெளிப்படுத்தலை பெற்றுக் கொண்டு, வெற்றிகரமாக தொழில்பயிற்சிக்கு தயார்ப்படுத்துவதாக அமைந்திருக்கும்.
கண்டி பயிலல் நிலையத்தில் கற்கைத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக Learning Management System (LMS)ஐ SHMA செயற்படுத்தியுள்ளது. LMS இனால் விரிவுரையாளர்களுக்கு ஒப்பற்ற முறையில் விரிவுரைகளை முன்னெடுக்கவும், முன்கூட்டியே அவர்களின் பணிகளை திட்டமிடவும், வினைத்திறனாக கண்காணிக்கவும் முடியும். மாணவர்களுக்கு மேலதிக பயிலல் அம்சங்களை தமது விரல்நுனிகளில் அணுகுவதற்கான வசதியை LMS வழங்குகின்றது. அவர்களின் தொழிற்பயிற்சியின் போது கண்காணிக்கப்படுவர்.
கற்கை உள்ளடக்கம் என்பது Swiss Vocational Skills Development (VSD) பாடவிதானத்துக்கமைய அமைந்துள்ளது. இதில் 70% செயன்முறை விளக்கங்களாகவும், 30% புத்தகக் கல்வியாகவும் அமைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் தொழில்சார் பயிலலை மேற்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். மேலும், மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சியுடன் அணி கட்டியெழுப்பல் செயற்பாடுகள் அடங்கிய பல்வேறு மென்திறன் விருத்தி பயிற்சிப்பட்டறைகளை அணுகும் வாய்ப்பும் கிடைக்கும்.
இலங்கையில் ஏற்கனவே காணப்படும் விருந்தோம்பல் கல்விமுறையிலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ள SSG நிகழ்ச்சி, பிரத்தியேகமான வழிமுறையைக் கொண்டுள்ளது. தனது 9 மாத பாடவிதானத்தில் மூன்றில் இரண்டு விடயங்கள், மாணவர்கள் மற்றும் தொழிற்துறையின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளன. இடையீடுகளினூடாக பிரயோக பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. கற்கைநெறியின் போது விருந்தோம்பலுடன் தொடர்புடைய பாடங்களுடன், வகுப்பறை மென்திறன் விருத்தி என்பது முக்கியத்துவம் பெறும் தலைப்பாக அமைந்துள்ளது.
6 minute ago
11 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
17 minute ago