Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 05 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் Al Safa இஸ்லாமிய நிதிச் சேவைகள் அலகுக்கு, SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு, ஏழாவது வருடமாக ரமாடா ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கையில் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் பிரிவில், சிறப்பாகச் செயலாற்றிய நிறுவனங்களுக்கு ஒன்பது பிரிவுகளில் விருதுகளை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வாக SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளது.
2017ஆம் ஆண்டின் சிறந்த சமூக மேம்பாட்டுக்கான தங்க விருது, ஆண்டின் சிறந்த லீசிங் நிறுவனத்துக்கான வெள்ளி விருது மற்றும் ஆண்டின் சிறந்த வின்டோ அல்லது அலகுக்கான வெண்கல விருதுகளைப் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தனதாக்கியிருந்தது.
இந்த விருதுகளை வெற்றியீட்டியமை தொடர்பில், பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான சிரேஷ்ட பதில் முகாமையாளர் லயனல் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் இயங்கும் நிறுவனங்களால் அதிகளவு எதிர்பார்க்கப்படும் விருதுகள் வழங்கும் நிகழ்வாக SLIBFI அமைந்துள்ளது. இந்த விருதுகளை வெற்றியீட்டியமையையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். எமது அர்ப்பணிப்புகள், வாடிக்கையாளர் மீதான சேவைகள் மற்றும் ஷரீஆ அடிப்படையிலான சேவைகள் போன்றன இந்த விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்படுவதற்கு வழிகோலியிருந்தன” என்றார்.
IFU பிரிவின் பிரதம முகாமையாளர் மொஹைதீன் மஹரூவ் கருத்துத் தெரிவிக்கையில், “2005 இல் எமது Al-Safa இஸ்லாமிய நிதியியல் பிரிவை நாம் அறிமுகம் செய்திருந்தோம். ஷரீஆ விதிமுறைகளின் பிரகாரம் எமது செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த செயற்பாடுகளை ஷரீஆ மேற்பார்வை சபை கண்காணித்திருந்தது. Al-Safa அலகின் கீழ் எட்டு கிளைகள் இயங்குகின்றன.பரந்தளவு நிதிச்சேவைகளைச் சர்வதேச நியமங்களின் பிரகாரம் பெற்றுக் கொடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் Al-Safa சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு பீப்பள்ஸ் லீசிங் திட்டமிட்டுள்ளது” என்றார்.
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம், இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago